வணிகம்

மும்பையில் ரூ.500 கோடிக்கு நிலம் வாங்கிய எஸ்.டி.டி குளோபல் டேட்டா நிறுவனம்!

ரியல் எஸ்டேட் நிறுவனமான லோதா டெவலப்பர்ஸ், மும்பையில் 24 ஏக்கர் நிலத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்.டி.டி குளோபல் டேட்டா சென்டர்ஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ.500 கோடிக்கு விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான லோதா டெவலப்பர்ஸ், மும்பையில் 24 ஏக்கர் நிலத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்.டி.டி குளோபல் டேட்டா சென்டர்ஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ.500 கோடிக்கு விற்றுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த டேட்டா சென்டர் சேவை வழங்குநரான எஸ்.டி டெலிமீடியா குளோபல் டேட்டா சென்டர்ஸ், சமீபத்தில் பலாவாவில் 24.34 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது.

லோதா டெவலப்பர்ஸ் 1.74 ஏக்கர் நிலத்தை விற்றுள்ள நிலையில், அதன் துணை நிறுவனமான பலாவா இண்டஸ்லாஜிக் 4 பிரைவேட் லிமிடெட் 22.6 ஏக்கர் நிலத்தையும், ஆக மொத்தமாக ரூ.499 கோடிக்கு விற்றுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த மாத தொடக்கத்தில், பலாவாவில் பசுமை ஒருங்கிணைந்த தரவு மைய பூங்காவை அமைப்பதற்காக, லோதா டெவலப்பர்ஸ் மகாராஷ்டிர அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, மொத்த முன்மொழியப்பட்ட முதலீட்டில் ரூ.30,000 கோடியாக இருக்கும். இதில் 6,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

370 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா, பல முன்னணி சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களை உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பைக் விற்பனை: ஃபிளிப்காா்ட்டுடன் ராயல் என்ஃபீல்ட் ஒப்பந்தம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை அருகே 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

அட்டகாசமான வரவேற்பு... டீயஸ் ஈரே வசூல் இவ்வளவா?

வயதான தாயை தூக்கிவந்து வாக்களிக்க வைத்த மகன்! | Bihar | Election

என்னை இந்தியராக சித்தரித்து மோசடி! ஹரியாணா வாக்காளராக இடம்பெற்ற பிரேசில் மாடல்!

நான் மண் அல்ல… மலை! காந்தா டிரைலர்!

SCROLL FOR NEXT