முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஆட்டோ, வங்கிப் பங்குகள் வீழ்ச்சி!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

Updated On : 7 ஏப்ரல் 2026, 11:52 am IST
தேசிய பங்குச்சந்தை - ANI
பகிர்:

வாரத்தின் முதல் நாளான நேற்று (ஏப். 6) பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கிய நிலையில் ஏற்றத்துடன் முடிந்தது.

தொடர்ந்து இன்று(ஏப். 7) பங்குச்சந்தைகள் சற்றே சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,734.36 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 161.26 புள்ளிகள் குறைந்து 73,945.59 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 46.85 புள்ளிகள் குறைந்து 22,921.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.72 சதவீதம், 0.14 சதவீதம் சரிவுடன் வர்த்தகமாகின்றன.

துறைவாரியாக, நிஃப்டி ஆட்டோ அதிகபட்சமாக 2% வரை சரிந்தன. அதேபோல நிஃப்டி வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் சரிவுடன் வர்த்தகமாகின்றன.

நிஃப்டி ஐடி, உலோகம், மீடியா பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் பஜாஜ் பைனான்ஸ், டெக் மஹிந்திரா, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்வுடனும் பெரும்பாலான பங்குகள் சரிந்து வர்த்தகமாகின்றன.

இஸ்ரேல் - ஈரான் போர், நாளை ரிசர்வ் வங்கியின் கூட்டம் ஆகியவற்றால் பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகிறது.

summary

Stock Market: Sensex down 160 pts, Nifty near 22,900

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.