போர்நிறுத்தம் எதிரொலி: எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகள் உயர்வு!
அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து 100 டாலர் என்ற நிலைக்கு கீழே சென்றது.
புதுதில்லி: அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து 100 டாலர் என்ற நிலைக்கு கீழே சென்றது.
இதன் விளைவாக, எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் பங்குகள், இன்றைய வர்த்தகத்தில், பெரும் ஏற்றம் கண்டன. குறிப்பாக இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்கின் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்தன.
சர்வதேச சந்தையில், 'பிரெண்ட் கச்சா எண்ணெய்' 15.16 சதவீதம் சரிந்து பேரல் ஒன்றுக்கு ரூ.92.54 டாலராக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கின் விலை 9.93 சதவீதம் உயர்ந்து, மும்பை பங்குச் சந்தையில் ரூ.364.30ஆக நிறவடைந்தன.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகள் 7.44 சதவீதம் உயர்ந்து ரூ.298.05ஐ எட்டியது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன பங்குகள் 6.62 சதவீதம் உயர்ந்து ரூ.143.40ஆக நிலைபெற்றது.