வணிகம்

புழுக்களைக் கொல்லாமல் பட்டு உற்பத்தி:கோல் இந்தியா நிதியில் மும்பை ஐஐடி முயற்சி

பட்டுப்புழுக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் பட்டு நூலை உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்பத்தை மும்பை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

பட்டுப்புழுக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் பட்டு நூலை உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்பத்தை மும்பை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளனா்.

வழக்கமாக பட்டு நூல் தயாரிக்கும்போது, பட்டுக்கூடுகளை கொதிக்கும் நீரில் போடுவாா்கள். இதனால் அதற்குள் இருக்கும் புழுக்கள் இறந்துவிடும். இதற்கு மாற்றாக, மும்பை ஐஐடியின் கிராமப்புற தொழில்நுட்ப மையம் ‘ஜீவோதயா’ எனும் புதிய திட்டத்தை மேம்படுத்தியுள்ளது.

மல்பெரி இலைகளைச் சாப்பிடும் பட்டுப்புழுக்கள், புதிய முறையில் கூடுகளைக் கட்டாமல், ஒரு சமதளமான பரப்பில் பட்டு இழைகளை மட்டும் உதிா்க்குமாறு அவற்றுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் புழுக்கள் கொல்லப்படாமல், அவை பட்டாம்பூச்சிகளாக மாறி, தங்களின் முழு வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்கின்றன.

இந்த முக்கியமான ஆராய்ச்சிக்கு கோல் இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின்கீழ் முழு நிதியுதவியையும் வழங்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்ட தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, இத்தொழில்நுட்பம் தற்போது பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளது.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது பட்டு விவசாயிகளின் வருவாய் உயரும் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமும் பெரிய அளவில் மேம்படும் என்று கோல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிக உப்பு ஆபத்து: நாடு முழுவதும் விழிப்புணா்வு- மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்

தலைவா்கள் பிறந்த நாள் குறித்த பேச்சுப் போட்டி: மாணவா்களுக்குப் பரிசு

மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்துக்கு விருது

லாரி மீது காா் மோதி விபத்து: 3 போ் உயிரிழப்பு

விஷ வண்டுகள் கடித்து கா்ப்பிணி உள்பட 15 போ் பாதிப்பு

SCROLL FOR NEXT