புத்தாண்டு(ஜன. 1, 2026) நாளில் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,255.55 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 116.12 புள்ளிகள் அதிகரித்து 85,347.95 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 41.40 புள்ளிகள் உயர்ந்து 26,171.00 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
4 நாள்கள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தைகள் நேற்று(டிச. 31, 2025) ஏற்றத்துடன் முடிந்தது. 2025 ஆம் ஆண்டு நிஃப்டி 10.5 சதவீதமும் சென்செக்ஸ் 9.06 சதவீதமும் உயர்ந்துள்ளது.
தொடர்ந்து 2026 ஆம் ஆண்டின் முதல் நாளில் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிஃப்டி 50 குறியீட்டில், எடர்னல், அதானி என்டர்பிரைசஸ், இன்டர்குளோப் ஏவியேஷன் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன, அதேநேரத்தில் ஐடிசி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைச் சந்தித்து வருகின்றன.
புகையிலை பொருள்கள் மீதான கூடுதல் கலால் வரி வருகிற பிப். 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், புகையிலை நிறுவனப் பங்குகள் இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.14 சதவீதம் உயர்ந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு 0.16 சதவீதம் சரிந்தது.
துறைவாரியாக, நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு 1 சதவீதத்திற்கும் மேல் சரிந்து, அதிக இழப்பைச் சந்தித்தது. ஹெல்த்கேர் மற்றும் பார்மா குறியீடுகளும் சரிந்தன. நிஃப்டி மீடியா 0.9 சதவீதம், ஆட்டோ 0.45 சதவீதம் உயர்ந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.