மும்பை: ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ள பொருளாதாரத் தரவுகள் மற்றும் டாலர் வலுவடைதல் ஆகியவற்றின் மத்தியில், இன்றயை வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பானது ரூ.90 என்ற குறியீட்டிற்குக் கீழே சரிந்தது.
தொடர்ச்சியாக அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை ஆகியவற்றால் இந்திய ரூபாயின் மதிப்பு பாதித்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.89.95 என்ற அளவில் தொடங்கி பிறகு நாளின் குறைந்தபட்சமான ரூ.90.25 சென்று பிறகு அதிகபட்சமாக ரூ.89.92 என்ற நிலையைத் தொட்டு பிறகு ரூ.90.20 என்ற அளவில் நிறவடைந்தது. இது அதன் முந்தைய நாள் முடிவை விட இது 22 காசுகள் குறைவாகும்.
நேற்று (வியாழக்கிழமை) ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து அமெரிக்க டாலருக்கு எதிரான ரூ.89.98 என்ற அளவில் முடிவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.