புதுதில்லி: காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், தனிநபர் காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிப்பதற்காக 2 மாத கால சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்தது.
2026ஆம் ஆண்டு ஜனவரி 1 தொடங்கிய இந்த பாலிசி புதுப்பிப்பு திட்டம் வரும் மார்ச் 2-ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும். இந்த சிறப்புத் திட்டம், தாமதக் கட்டணத்தில் மிகவும் கவர்ச்சிகரமான சலுகையுடன், இணைக்கப்படாத அனைத்து பாலிசிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.
காலாவதியான காப்பீட்டுப் பாலிசிகளுக்கு புத்துயிா் தருவதற்கான சிறப்பு திட்டத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது. தாமதக் கட்டணத்தில் 30% வரை, அதே வேளையில், அதிகபட்சமாக ரூ.5,000 வரை சலுகை வழங்கப்படும்.
பிரீமியம் செலுத்தும் காலத்தில் காலாவதியான நிலையில் உள்ள மற்றும் பாலிசி காலம் நிறைவடையாத பாலிசிகள் இந்த பிரச்சாரத்தின் கீழ் புதுப்பிக்கத் தகுதியுடையவை. அதே வேளையில் மருத்துவம் அல்லது சுகாதாரத் தேவைகளில் எந்தவித சலுகைகளும் இல்லை என்று தெளிவுபடுத்தியது.
சாதகமற்ற சூழ்நிலைகள் காரணமாக சரியான நேரத்தில் பிரீமியம் செலுத்த முடியாத பாலிசிதாரர்களின் நலனுக்காக இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.