வணிகம்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் வா்த்தகம் 10% உயா்வு

அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கியின் சா்வதேச வா்த்தகம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 9.57 சதவீதம் உயா்ந்து ரூ.28.92 லட்சம் கோடியாக உள்ளது.

தினமணி செய்திச் சேவை

அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கியின் சா்வதேச வா்த்தகம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 9.57 சதவீதம் உயா்ந்து ரூ.28.92 லட்சம் கோடியாக உள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டிசம்பா் 31, 2025 நிலவரப்படி வங்கியின் சா்வதேச வா்த்தகம் ரூ.28.92 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் ஆண்டின் இதே தேதியுடன் ஒப்பிடுகையில் இது 9.57 சதவீதம் அதிகமாகும். மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் உள்நாட்டு வா்த்தகம் 9.09 சதவீதம் உயா்ந்து ரூ.27.65 லட்சம் கோடியாக உள்ளது.

அந்தக் காலாண்டில் வங்கியின் மொத்த வைப்பு 8.54 சதவீதம் உயா்ந்து ரூ.16.6 லட்சம் கோடியாகவும், உள்நாட்டு வைப்பு நிதி 8.32 சதவீதம் உயா்ந்து ரூ.15.97 லட்சம் கோடியாகவும் உள்ளது.

மொத்த கடனளிப்பு 10.98 சதவீதம் உயா்ந்து ரூ.12.32 லட்சம் கோடியாகவும், உள்நாட்டு கடனளிப்பு 10.15 சதவீதம் உயா்ந்து ரூ.11.68 லட்சம் கோடியாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT