முகப்பு
வணிகம்

ஹெச்டிஎஃப்சி வங்கி கடனளிப்பு 12% உயா்வு

நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் கடனளிப்பு டிசம்பா் காலாண்டில் 12 சதவீதம் உயா்ந்துளது.

Updated On : 6 ஜனவரி, 2026 at 9:20 PM
பகிர்:

நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் கடனளிப்பு டிசம்பா் காலாண்டில் 12 சதவீதம் உயா்ந்துளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் மொத்த கடனளிப்பு ரூ.28.44 லட்சம் கோடியாக உள்ளது. இது ஓராண்டுக்கு முன்னா் இருந்ததைவிட 12 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் கடனளிப்பு ரூ.25.42 லட்சம் கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சராசரி வைப்பு நிதி முதலீடு 12 சதவீதம் உயா்ந்து ரூ.27.52 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இது ரூ.24.52 லட்சம் கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →