கவாசாக்கி வல்கான் எஸ்  Photo: Website / Kawasaki Vulcan
வணிகம்

ரூ. 8.13 லட்சத்தில் கவாசாகியின் புதிய மாடல் அறிமுகம்!

கவாசாக்கி வல்கான் எஸ் மற்றும் இசட் 650 ஆர்.எஸ். பைக்குகள் அறிமுகம்...

இணையதளச் செய்திப் பிரிவு

கவாசாக்கி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய வல்கான் எஸ் மற்றும் இசட் 650 ஆர்.எஸ். ஆகிய பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது.

புதிய வல்கான் எஸ் மாடலின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும், இ20 எரிபொருள் விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில் முக்கிய மேம்படுத்தல் செய்யப்பட்டுள்ளது.

முன்பிருந்த பியர்ல் மேட் கிரீன் வண்ணத்துக்கு பதிலாக மெட்டாலிக் ஃபிளாட் ஸ்பார்க் பிளாக் வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இசட் 650 எஸ் மாடலைப் பொருத்தவரை இபோனி பெயிண்ட்டுக்கு பதிலாக ஓசன் ப்ளூவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வல்கான் எஸ் மாடலின் எடை முன்பிருந்ததைவிட 6 கிலோ அதிகமாக 235 கிலோவாக உள்ளது. இ20 விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சில மேம்படுத்தல் செய்யப்பட்டு, அதே 649 சிசி, பேரலல் ட்வின் என்ஜின் அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த பைக்கின் என்ஜின் 60.1 பிஎச்பி திறனையும், 61 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

வல்கான் எஸ் ஷோரூம் விலை ரூ. 8.13 லட்சமாகவும், இசட் 650 ஆர்.எஸ். விலை ரூ. 7.83 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Kawasaki Vulcan S bike

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடையின்றி செல்ல வேண்டாம்: சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை!

தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை தொடரும்!

இந்த வார ஓடிடி படங்கள்!

சிறந்த படங்களுக்கான ஆஸ்கர் பட்டியலில் 4 இந்திய படங்கள்!

கோடியக்கரையில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

SCROLL FOR NEXT