டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 26 காசுகள் சரிந்து ரூ.90.16 ஆக நிறைவு!
இன்றைய வர்த்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 26 காசுகள் சரிந்து ரூ.90.16 ஆக நிலைபெற்றது.
மும்பை: அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி உள்ளிட்ட காரணத்தால் இன்றைய வர்த்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 26 காசுகள் சரிந்து ரூ.90.16 ஆக நிலைபெற்றது.
அமெரிக்க டாலரின் வலுவான நிலை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் நிலவும் பலவீனமான நிலை உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மீது அழுத்தம் ஏற்படுத்துவதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.88 என்று உயர்ந்து வர்த்தகத்தைத் தொடங்கிய போதிலும், நாள் முழுவதும் சரிவை சந்தித்து ரூ.90.16 என்ற அளவில் நிலைபெற்றது. இது அதன் முந்தைய நாள் முடிந்த விலையை விட 26 காசுகள் சரிவாகும்.
Advertisement
Advertisement
நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.89.90 ஆக இருந்தது.
The rupee declined 26 paise to settle at 90.16 against the US dollar on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.