புதுதில்லி: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ மற்றும் எக்ஸ்இவி 9எஸ் ஆகிய வாகனங்களுக்கு இதுவரை 93,689 முன்பதிவுகளைப் பெற்றுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு ரூ.20,500 கோடிக்கும் அதிகம்.
மும்பையைச் சேர்ந்த இந்த வாகனத் தயாரிப்பு நிறுவனம், முன்பதிவு செயல்முறையை இன்று காலையில் தொடங்கி, மதியம் 2 மணி வரை இந்த முன்பதிவுகளைப் பெற்றதாக தெரிவித்துள்ளது.
எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ கார்களுக்கான விநியோகம் தொடங்கிவிட்டது என்றும், எக்ஸ்இவி 9எஸ் கார்களுக்கான விநியோகம் ஜனவரி 26 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.