Bharat Coking Coal Limited 
வணிகம்

அறிமுகமான நாளிலேயே 77% உயர்வுடன் வர்த்தகமான பாரத் கோக்கிங் கோல்!

பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் பங்குகள் கிட்டத்தட்ட 77% உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: இன்றைய பிரம்மாண்ட அறிமுகத்தை தொடர்ந்து, பங்குச் சந்தையில், பாரத் கோக்கிங் கோல் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 77% உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.18,935 கோடியாக உயர்ந்துள்ளது.

பிஎஸ்இ-யில், ஒரு பங்கின் வெளியீட்டு விலையான ரூ.23-ஐ விட 96.56% அதிகரித்து ரூ.45.21க்கு பட்டியலிடப்பட்டது. பிறகு இது 76.78% உயர்வுடன் ரூ.40.66ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

என்எஸ்இ-யில் 95.65% உயர்ந்து, ரூ.45க்கு அறிமுகமானது. நிறுவனத்தின் பங்குகள் 76.43 சதவீத உயர்வுடன் ரூ.40.58ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று, பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ இறுதி நாளில் 146.81 மடங்குக்கு மேல் முதலீட்டாளர்கள் விண்ணப்பித்தனர். ரூ.1,071 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓ, ஒரு பங்கின் விலை வரம்பை ரூ.21 முதல் ரூ.23 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ, ஜனவரி 9 அன்று முதலீட்டாளர்களுக்கு விண்ணப்பிக்க திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே முழுமையாக விண்ணப்பிக்கப்பட்டது.

Shares of Bharat Coking Coal Ltd ended with a premium of nearly 77 per cent, commanding a market valuation of Rs 18,935 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுகாதாரமான குடிநீா் கோரி முற்றுகை

ஹெலிகாப்டா் இறங்கு தளத்துக்கு எதிா்ப்பு

ஏவிசி கல்லூரி மாணவா்கள் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்

கிலோ ரூ.3 லட்சத்தைக் கடந்த வெள்ளி!

கர்நாடகத்தில் வாக்குச்சீட்டு முறையில் உள்ளாட்சித் தேர்தல்!

SCROLL FOR NEXT