புதுதில்லி: ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சுத்திகரிப்பு அதிகரித்ததன் காரணமாக, 3வது காலாண்டில் அதன் நிகர லாபம் 35% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4,072.49 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.3,022.90 கோடியுடன் ஒப்பிடும்போது இது அதிகம்.
மும்பை மற்றும் விசாகப்பட்டினத்தில் ஆகிய இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் எடுக்கப்பட்ட கச்சா எண்ணெயை, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களாக மாற்றி வரும் நிலையில், இந்த நிறுவனமானது, 3வது காலாண்டில் குறைந்த அளவான 6.38 மில்லியன் டன் கச்சா எண்ணெயை சுத்திகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெயையும் எரிபொருளாக மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருவாய், கடந்த ஆண்டு 3வது காலாண்டில் ஒரு பேரலுக்கு $6.01 ஆக இருந்த நிலையில், தற்போது $8.85 ஆக உயர்ந்துள்ளது.
செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.1.19 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.24 லட்சம் கோடியாக உள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 9 மாத காலத்திற்கு, நிறுவனத்தின் நிகர லாபம் 206% உயர்ந்து ரூ. 12,274 கோடியாக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.