மும்பை: உலகச் சந்தைகளில் அதிகரித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி உள்ளிட்டவையால் இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து, இதுவரை இல்லாத குறைந்தபட்ச அளவான ரூ.91.64ஆக நிலைபெற்றது.
கிரீன்லாந்து விவகாரம் மற்றும் ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள், உள்நாட்டு சந்தையில் நிலவும் எதிர்மறைப் போக்கு உள்ளிட்டவையால் முதலீட்டாளர்களின் மனநிலையை மேலும் பாதித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.91.05 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, ஒரு கட்டத்தில் ரூ.91.74 என்ற நாளின் குறைந்தபட்ச அளவைத் தொட்ட பிறகு, முந்தைய நாள் முடிவிலிருந்து 67 காசுகள் சரிந்து, இதுவரை இல்லாத குறைந்தபட்ச அளவான ரூ.91.64 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று 7 காசுகள் சரிந்து ரூ.90.97ஆகம் நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.