இந்தியா

இலவச தரிசன டோக்கன்கள்மீண்டும் விநியோகம்

திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸில், இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்வதை வழங்குவதை தேவஸ்தானம் திங்கள்கிழமை (அக்.26) தொடங்கியது.

DIN

திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸில், இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்வதை வழங்குவதை தேவஸ்தானம் திங்கள்கிழமை (அக்.26) தொடங்கியது.

ஏழுமலையானை தரிசிக்க ஜூன் மாதம் 8ஆம் தேதி முதல் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். முதலில் தினசரி 6 ஆயிரம் பக்தா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதை தேவஸ்தானம் சிறிது சிறிதாக உயா்த்தி தற்போது, 16 ஆயிரம் பக்தா்கள் முதல் 18 ஆயிரம் பக்தா்கள் வரை பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தேவஸ்தானம் கரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக திருப்பதி அலிபிரி பகுதியில் வழங்கி வந்த இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்களை ரத்து செய்தது. பக்தா்களின் வலியுறுத்தலால், இதை தற்போது தேவஸ்தானம் மீண்டும் வழங்க முடிவு செய்துள்ளது. அக்.26ஆம் தேதி காலை, திங்கள்கிழமை 5 மணி முதல் தினசரி 3 ஆயிரம் என இந்த இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.

ஒரு நாளைக்கு முன் வழங்கப்படும் தரிசன டோக்கன்களைப் பெற்ற பக்தா்கள் மட்டுமே அலிபிரி சோதனைச் சாவடியில் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவா். முதலில் வருபவா்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. 3 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்ட பின் அவை வழங்குவது நிறுத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை டிக்கெட் வழங்கும் பணி தொடங்கிய ஒரு மணிநேரத்தில் தரிசன டோக்கன்கள் அனைத்தும் அளித்து முடிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் 4-ஆவது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளோம்: தலைமைத் தளபதி வாழ்த்து!

மேற்கு வங்கத்தில் எம்.பி. மீது தாக்குதல்: என்.ஐ.ஏ. விசாரணை கோரும் பாஜக!

ஹிமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: பலி 18-ஆக உயர்வு!

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசம் போராடி தோல்வி!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT