முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் 41 கையெறி குண்டுகள் பறிமுதல்

மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலிருந்து 41 கையெறி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 

Updated On : 3 ஏப்ரல், 2021 at 11:29 AM
மேற்கு வங்கத்தில் 41 கையெறி குண்டுகள் பறிமுதல்
பகிர்:

மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலிருந்து 41 கையெறி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 

தகவல்களின் அடிப்படையில், பிரங்கஞ்ச் ஜி.பியின் கீழ் உள்ள பத்மபுகூர் பகுதியில்,  பங்கூர் காவல் நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், நேற்று ஒரு புதரிலிருந்து 41 கையெறி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. 

Advertisement

மேற்கு வங்க தேர்தலின் முதல் இரண்டு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முறையே மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அடுத்த கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.