இந்தியா

தெலங்கானாவில் ஆயிரத்தைத் தாண்டியது கரோனா: 6 பேர் பலி

PTI

தெலங்கானாவில்  கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், 

தெலங்கானாவில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 1078 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3.10 லட்சமாக உயர்ந்துள்ளது. 

மேலும், தொற்று காரணமாக 6 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி 1,712 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் இதுவரை 3,10,819 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். 

நோய் பாதித்து தற்போது 6,900 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளிக்கிழமை மட்டும் 59,705 பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், நாட்டில் முதல் கட்டமாக 11,38,488 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1-ல் 2,45,936 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT