என்னம்மா! உங்கள் இளையராணியின் வயது 6 மாதங்கள் ஆகிவிட்டதா? பிறந்த எடையைப் போல் இரண்டு மடங்கு எடை இருக்க வேண்டும். உதாரணமாக 3 கிலோ எடையுடன் குழந்தை பிறந்திருந்தால் இப்போது 6 கிலோ அதிகமாக அல்லது குறைவாக இருக்கலாம். மிகவும் அதிகமாக அல்லது மிகவும் குறைவாக இருந்தால் மருத்துவ ஆலோசனை தேவை!
கொழு கொழு குழந்தை, அதிகமான எடை உள்ள குழந்தை பிற்காலத்தில் பல நோய்களுக்கு ஆளாகலாம் என்கிறது தற்கால குழந்தை மருத்துவம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே!
தலைச் சுற்றளவு 40-42 செ.மீ இருக்க வேண்டும். 6 மாதங்களில் ஒரு சில குழந்தைகளுக்கு கீழ்த் தாடை முன் பற்கள் (lower incisocs) தோன்ற ஆரம்பிக்கலாம்.
மல ஜலம் கழிக்கும் போது முன்பு இருந்த அழுகை இருக்காது. இந்தப் பழக்கங்களும் கொஞ்சம் செட்டில் ஆகி இருக்கும்.
பகலில் தூங்கி இரவில் அழும் வழக்கமும் மெதுவாக மாறிவிடும். பகலில் ஒரு சில மணி நேரங்கல் மட்டும் தூங்கும் குழந்தை, இரவில் கொஞ்சம் அமைதியாக தூங்கும். ஆனால் 2-3 முறை பாலுக்கு அழலாம். இடுப்புத் துணி நனைந்தாலும் அழலாம்.
குழந்தை பிறந்தவுடன் இடது தோளில் போடப்பட்ட BCG என்ற TB நோய் தடுப்பு ஊசி முதலில் சிறிது புண்ணாகி இப்போது நன்கு காய்ந்து தழும்பாக மாறி இருக்கும். குழந்தை பிறந்த 6 வாரத்தில் போடப்படும் DPT/OPV 3 முறை முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். 2-3 முறை ரோட்டா வைரஸ் (ஒரு வகை வயிற்றுப் போக்கு) தடுப்பு மருந்து போடப்பட்டு இருக்க வேண்டும். போலியோ தடுப்பு ஊசி (IPV – injectable polio vaccine) நிமோ காக்கல் தடுப்பு ஊசி (pnemococcal vaccine) போன்றவை 2-3 முறை போடப்பட்டு இருக்க வேண்டும்.
B வகை மஞ்சள் காமாலை தடுப்பு ஊசி முதல் தவணை பிறந்த உடன்ம் இரண்டாம் தவணை 6 வாரங்கள், மூன்றாம் தவணை 6 மாதங்கள் என்று 3 முறையும் போட்டு முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். இதனையும் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
வாய் வழி போலியோ தடுப்பு மருந்து (OPV) தரப்பட்டாலும் ஊசி மூலம் தரப்பட வேண்டும் என்பது தான் தற்போதைய நிலைப்பாடு.
ரோட்டா வைரஸ் வயிற்றுப் போக்கு 5 வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் – முக்கியமாக வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் தண்ணீர் போல் அதிகமாக மலம் வெளியாகி உடலில் உள்ள நீர் சத்து எளிதில் வற்றி (Dehydration) உயிருக்கே ஆபத்தாக முடியலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தை நல்ல ஊட்டச் சத்துள்ள குழந்தை நோஞ்சான் குழந்தை, நல்ல சுத்தமாகப் பராமரிக்கப்பட்ட குழந்தை ஒரு வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு ஏற்படும் நோய். தண்ணீர் போல் அதிகமாக மலம் வெளியாகி உடலில் உள்ள நீர்சத்து எளிதில் வற்றி (dehyderation) உயிருக்கே ஆபத்தாக முடியலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தை நல்ல ஊட்டச் சத்துள்ள குழந்தை, நோஞ்சான் குழந்தை, நல்ல சுத்தமாகப் பராமரிக்கப்பட்ட குழந்தை என்ற எந்தவித வேறுபாடுமின்றி ரோட்டா வைரஸ் கிருமித் தொற்றால் வயிற்றுப் போக்கு ஏற்படலாம். ஒரு டோஸ் மருந்து சுமார் 1000 முதல் 1200 ரூபாய்! விலை அதிகம் தான். ஆனாலும் குழந்தையின் பாதுகாப்பு முக்கியம் இல்லையா? வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சலைன் அல்லது குளுக்கோஸ் ஏற்றப்பட்டு ஊசி மாத்திரைகள் குடுத்து சிகிச்சைப் பெற ஆகும் செலவும் அவஸ்தையும் தவிர்க்கப்பட வேண்டும் அல்லவா?
இதே போலத்தான் நியூமோக்காக்கல் தடுப்பு ஊசியும். Pnemo coccus என்பது நுரையீரல், நடுக்காது, மூளை, வயிற்றுப் பகுதியின் உறை (Peritoneium) ஆகியவற்றில் தொற்றி ஆபத்தாகலாம். அந்த கிருமிக்கு எதிராக தடுப்பு ஊசி உள்ளது. விலை சற்று அதிகம் தான். இருப்பினும் குழந்தையின் பாதுகாப்பு முக்கியம் அல்லவா? தடுப்பு ஊசிக்கு செலவு செய்வது ஆரோக்கியத்திற்கான முதலீடு (Investment) என்று நினைக்க வேண்டும். Cost benefit ratio கணக்கிட்டுப் பாருங்களேன்! இது புரியும்.
குழந்தையை தினமும் குளிக்க வைக்க வேண்டும். குழந்தை தான் குளிப்பதை ரசிக்க வைக்க அம்மா முயற்சி செய்ய வேண்டும். குழந்தை குளிக்கும் போது விளையாடும். வெயில் காலங்களில் மாலை நேரம் குளிக்க வைக்கலாம். லேசான சூட்டுடன் நீர், அல்லது வெயிலின் சூட்டில் வைக்கப்பட்ட நீர் போதுமானது.
ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் தான்! போதவில்லை என்று உணர்ந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் நீர் கலக்காத மாட்டுப்பால் பாலாடை அல்ல்டஹு சங்கு ஸ்பூன் கொண்டு தரலாம்! சர்க்கரை சேர்க்க வேண்டாம். தனியாக தண்ணீர் தர வேண்டாம். பவுடர் பால் வகைகள், பாட்டில், ஊட்டி போன்றவை கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
ரவீந்திரநாத் தாகூரின் கூற்றை ஞாபகம் கொள்வோம்! ‘இறைவன் இருக்கிறான் என்பது குழந்தைகள் மூலம் நிருபிக்கப்படுகிறது’. குழந்தை இயற்கையின் வரம்!
எந்த எந்த விதத்தில் குழந்தையைப் பாதுகாக்க முடியுமோ அதைச் செயல்படுத்த வேண்டும்! எந்தவித சேதாரமும் ஏற்படுத்தக் கூடாது!
(படத்தில் - நிதில்)
தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.