அரவிந்தன் நீலகண்டன்
அரவிந்தன் நீலகண்டன், நாகர்கோயிலைச் சேர்ந்தவர். உளவியலிலும் பொருளியலிலும் பட்டம்
அரவிந்தன் நீலகண்டன், நாகர்கோயிலைச் சேர்ந்தவர். உளவியலிலும் பொருளியலிலும் பட்டம் பெற்றிருக்கிறார். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் களப்பணியாளராக சேவை செய்கிறார். நிகழ்தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களுள் ஒருவர்.
சமூகவியல், அறிவியல், இந்துமதம், வரலாறு, உளவியல், சூழலியல் ஆகிய பன்முகப்பட்ட துறைகளிலும் ஆழ்ந்த வாசிப்பும், புலமையும் கொண்டவர். அரசியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருவதுடன், அறிவியல், சமூகவியல், திரைப்படம், ஆன்மிகம் சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.
நாளைய தலைமுறைக்கான தேவைகளை உணர்ந்து தனது எழுத்துகள் மூலம் ஒரு மௌனமான தனிநபர்ப் போராட்டத்தை இடைவிடாது மேற்கொண்டு வருபவர்.