கருத்துக் களம்

இலங்கை தமிழருக்கு

இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வேண்டும், அவர்களுடைய இன்னல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்ற உணர்வு தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் இருக்கிறது. அதற்கான வழிகள்தான் தோன்றவில்லை.

க. பழனித்துரை

இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வேண்டும், அவர்களுடைய இன்னல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்ற உணர்வு தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் இருக்கிறது. அதற்கான வழிகள்தான் தோன்றவில்லை.

இதற்கான முன் முயற்சியைத் தமிழக அரசு எடுக்க வேண்டும். இலங்கை மாணவர்களுக்கு உதவ தனி அறக்கட்டளை அல்லது நிதியம் ஏற்படுத்தப்பட வேண்டும். அதில் தனியாரும் நன்கொடை அளிக்க வழி செய்ய வேண்டும். அந்தத் தொகையைக் கொண்டு, தேவைப்படும் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு உயர் கல்வி பயில நிதியுதவி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் எல்லா உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி நிலையங்களிலும் எல்லா பாடப்பிரிவுகளிலும் மாணவர்கள் முழுவதாகச் சேர்வதில்லை. பொறியியல் கல்லூரிகளிலிருந்து கலைக் கல்லூரிகள்வரையில் காலியிடங்கள் ஏற்படுகின்றன. அந்தக் காலியிடங்களை இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்காக ஒதுக்கலாம். இதற்கான முடிவினைத் தமிழக அரசு எடுக்கலாம். அதுவன்றி எல்லா கல்லூரிகளிலும் முதல் கட்ட மாணவர் சேர்க்கையின்போதே இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கும் குறிப்பிட்ட சதவீதத்தைக் கூட இடைக்கால ஏற்பாடாகச் சிறிதளவு ஒதுக்கி உதவலாம். இதைத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகள், சமுதாயத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றலாம். இதில் அரசு கல்லூரிகளைப் போல தனியார் கல்லூரி நிர்வாகங்களும் பங்கேற்கலாம். தங்களுடைய

கல்லூரிகளில் இலங்கைத் தமிழ் மாணவர்களைச் சேர்ப்பதுடன் அவர்களுடைய நிலைமையைக் கருதி இலவசமாகவே புத்தகங்கள், நோட்டுகள், கட்டணத்தில் முழு விலக்கு அல்லது கணிசமான தொகை குறைப்பு, விடுதிக் கட்டணத்தில் முழுச் சலுகை அல்லது ஓரளவுச் சலுகை என்றும் அவர்களுடைய படிப்புக்கு உதவலாம்.

இலங்கைத் தமிழ் மாணவர்கள் இயல்பாகவே அறிவாளிகள். அவர்கள் தமிழ்நாட்டில் படிப்பதன் மூலம் கல்வி நிலையங்களும் தங்களுடைய தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக்கொள்ளலாம். ஒவ்வொராண்டும் சுமார் ஆயிரம் இலங்கைத் தமிழ் மாணவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சமூக அறிவியல், நிர்வாக மேலாண்மையியல் ஆகிய படிப்புகளை முடித்து இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் அங்கே மிகப்பெரிய சமூக, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். வாய்ப்புள்ளவர்கள் வேறு நாடுகளுக்கும் சென்று பணிபுரிய முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT