கிச்சன் கார்னர்

பால்கோவா கொழுக்கட்டை

பச்சரிசியை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.  வாணலியில் அரை டம்ளர் தண்ணீரை ஊற்றி சூடாக்கி நெய்யும்,

தவநிதி

தேவையான பொருட்கள்:

பச்சரிசி-200 கிராம்

சர்க்கரை சேர்த்த பால்கோவா - 50கிராம்

துருவிய தேங்காய்-1 முடி

அவல்-1 மேசைக்கரண்டி

நெய்-1 மேசைக்கரண்டி

ஏலக்காய் - 2 பொடி செய்தது

உப்பு-1 சிட்டிகை

செய்முறை: அவலை பாலில் ஊற வைக்கவும். தேங்காய்த் துருவலை நெய்யில் வதக்கிக் கொள்ளவும்.

பச்சரிசியை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.  வாணலியில் அரை டம்ளர் தண்ணீரை ஊற்றி சூடாக்கி நெய்யும், உப்பும் சேர்த்து மாவைக் கொட்டிக் கிளறிக் கொள்ளவும். மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும் அதை அடுப்பிலிருந்து இறக்கி சிறு சிறு உருண்டைகளாக்கவும். பிறகு,  பாலில் ஊறிய அவல், பால்கோவா, தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பூரணம் செய்து கொள்ளவும். அடுத்து மாவு உருண்டைகளைப் பூரிக்கு இடுவது போல உருட்டி, அதன் நடுவில் தயாராக இருக்கும் பால்கோவா பூரணத்தை வைத்து மூடிக் கொள்ளவும்.  இப்படி பிடித்தக் கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் அடுக்கி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

பால்கோவா சுவையுடன் இந்தக் கொழுக்கட்டையின் சுவை அபாரமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT