கிச்சன் கார்னர்

ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்

செய்முறை: ரவையை வறுத்தெடுத்துப் பால் ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை வேகவிடவும். அதனுடன் வதக்கிய வெங்காயம், கார்ன், சீஸ், கரம் மசாலா தூள், சாட் மசாலா, சில்லி தூள், உப்பு மற்றும்

தவநிதி

தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன் - ஒன்றரை கிண்ணம்

ரவை - ஒரு கிண்ணம்

துருவிய சீஸ் - அரை கிண்ணம்

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)

கொத்துமல்லித் தழை - சிறிதளவு

கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி

சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி

பால் - 2 டம்ளர்

மைதா - 2 தேக்கரண்டி

ப்ரெட் தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: ரவையை வறுத்தெடுத்துப் பால் ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை வேகவிடவும். அதனுடன் வதக்கிய வெங்காயம், கார்ன், சீஸ், கரம் மசாலா தூள், சாட் மசாலா, சில்லி தூள், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் மைதாவை சப்பாத்தி மாவு போல பிசைந்து, பிறகு சிறியதாக எடுத்து உருட்டி அதனுள் தயார் செய்து வைத்துள்ள கலவையை வைத்து  ரோல் போல செய்து கொள்ளவும்.  பிறகு, ப்ரெட் தூளில் புரட்டி எடுக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தயார் செய்து வைத்துள்ள ரோலைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சுவையான ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT