இனிப்பு வகைகள்

கேப்பைக் கொழுக்கட்டை

மரகத மீனாட்சி

தேவையான பொருட்கள்

கேப்பை- 1 கிலோ

கேப்பையை களைந்து ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஓரீரவு ஒரு மெல்லிய துணியில் போட்டு வைக்கவும். மறு நாள் காயவைக்கவும்.

காய்ந்த உடன் வறுத்து மாவு ஆலையில் அரைத்து வைக்கவும்.

மாவு-1 கிண்ணம்

மாவில் உப்புப் போட்டு கொதி நீர் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறவும்.  சிறிய கொழுக்கட்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

பழுத்த நேந்திரம் பழம் - 2

பழத்தின் தோல் உரித்து வில்லைகளாக (சுமார் 2 இன்ச் தடிமன்) நறுக்கவும். கொழுக்கட்டை வேக வைக்கும் போதே பழத்தையும் இட்லித் தட்டின் துளைகள் உள்ள

பகுதியில் வைத்து வேகவிடவும். அதாவது பழத்தின் கீழ் நீர் தேங்கும் வாய்ப்பு இருந்தால் பழத்தின் ருசி குறையும்.
புதிதாக உடைத்த தேங்காய் - 1 மூடி

தேங்காய் சில் கீறி அதன் பின்னால் உள்ள தோலைச் சீவி எடுத்து வைக்கவும்.

சாப்பிடும் முறை:

தேங்காய் சில் ஒரு கடி, ஒரு கொழுக்கட்டை என சாப்பிடவும். இடையில் நேந்திரம் பழம் சாப்பிடவும். ஒரு தட்டில் கொழுக்கட்டைகளைக் கொட்டி சுற்றிலும் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டால் உடனே காலியாகிவிடும். இதுவும் சரிவிகித உணவுதான். 

மரகத மீனாட்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெய்பூரை வென்றது டெல்லி!

கிருஷ்ணாபுரத்தில் தற்கொலைக்கு முயன்ற விஏஓ உயிரிழப்பு

லாபா அசத்தல்; பிரிட்ஸ் அதிரடி: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி

டிரம்பப்பின் போா் நிறுத்த திட்டம்: எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சு

நிதியுதவி கோரி ஆட்டோ ஓட்டுநா்கள் மனு

SCROLL FOR NEXT