இனிப்பு வகைகள்

பன்னீர் பாயசம்

பால் காய்ந்தவுடன் ஐந்து நிமிடம் வைத்திருந்து இறக்கிவிடவும். பன்னீர் பாயசம் ரெடி.

தவநிதி

தேவையானவை:

துருவிய பன்னீர் - அரை கிண்ணம்
பால் -  இரண்டு கிண்ணம்
மில்க்மெய்ட் - 2 தேக்கரண்டி
சர்க்கரை -  கால் கிண்ணம்
குங்குமப்பூ - சிறிதளவு
சோள மாவு - ஒரு தேக்கரண்டி (தண்ணீரில் கரைத்து கொள்ளவும்)
முந்திரி, பாதாம் - ஐந்து துண்டு (நெய்யில் வறுத்தது)
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி காய்ந்ததும் சிறு தீயில் வைத்து, அதில் பன்னீர் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும். கரைத்த சோள மாவு ஊற்றி ஒரு நிமிடம் நன்றாக கிளறவும். பின், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

குங்குமப்பூ, ஏலக்காய் தூள், முந்திரி துண்டுகள் சேர்த்து கிளறி ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும். பால் காய்ந்தவுடன் ஐந்து நிமிடம் வைத்திருந்து இறக்கிவிடவும். பன்னீர் பாயசம் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை! ஊடகங்களுக்கு வங்கதேச அரசு எச்சரிக்கை!

அமித் ஷாவுக்கு தேநீர் விருந்து அளித்த நயினார் நாகேந்திரன்

சென்னையில் கனமழை

ஹீரோ ஆசிய ஹாக்கி 2025: கோப்பையை அறிமுகப்படுத்தினார் துணை முதல்வர் உதயநிதி!

இந்தியாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு!

SCROLL FOR NEXT