இனிப்பு வகைகள்

மூங்கிலரிசி தேங்காய்ப் பால் சாதம்

நா.நாச்சாள்

தேவையானவை:
மூங்கிலரிசி ரவை - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
சின்ன வெங்காயம் - 6
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
பட்டை - 1
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:  சின்ன வெங்காயத்தை தோலுரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுக்கவும். மூங்கிலரிசியை ரவையாக உடைத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலை மிக்ஸியிலிட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து பிழிந்து 1 கிண்ணம் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்.

மண் பானையை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், நறுக்கின வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு இஞ்சி,  பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் 1 கிண்ணம் தேங்காய்ப் பால் சேர்க்கவும்.

மேலும் 1 கிண்ணம் தண்ணீருடன் உப்பு சேர்க்கவும். மண் பானையை சிறுதீயில் வைத்து மூடி வைத்து கொதிக்க விடவும். சுமார் 3 நிமிடங்கள் கழித்து, கொதித்து நுரை வரும் போது மூங்கிலரிசி ரவையைப் போடவும். பின் நன்கு கிளறி 15 நிமிடம் வேக விடவும். 3 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விட்டு நன்கு வெந்ததும் இறக்கவும்.

சுவையான சத்தான மூங்கிலரிசி தேங்காய்ப் பால் சாதம் தயார். மனமும் சுவையும் உள்ள ஒரு உணவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு எதிரான மகளிா் ஆணைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி உதவி ஆட்சியரிடம் தவெக மனு

பணி நிரந்தரம் கோரி தமிழகம் முழுவதும் செவிலியா்கள் தா்னா

திருவண்ணாமலை மலைப்பகுதி, நீா்நிலைகளை ஆக்கிரமிப்பாளா்களை உடனடியாக அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT