இனிப்பு வகைகள்

நார்த்தங்காய் இனிப்பு பச்சடி

லட்சுமி ராமன்

தேவையானவை:

நார்த்தங்காய் - 1
வெல்லம் - அரை கிண்ணம்
(தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் - 1
மிளகாய் வற்றல் - 1
உப்பு - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது

செய்முறை:
நார்த்தங்காயைச் சுத்தம் செய்து, விதைகளை நீக்கிவிட்டு பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய நார்த்தங்காயைச் சேர்த்து வதக்கி அதில் சிறிது உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போகவிடவும். பின்னர், கரைத்த வெல்லத்தை வடிக்கட்டி பின்னர் வாணலியில் விட்டு பாகு பதத்திற்கு காய்ச்சவும். பின்னர், வெல்லப் பாகை நார்ந்தங்காயுடன் சேர்த்து கிளறவும். எல்லாம் ஒன்று சேர்ந்து ஜாம் பதம் வந்தவுடன் இறக்கவும். சுவையான நார்த்தங்காய் இனிப்பு பச்சடி தயார். சப்பாத்தி, தோசை தகுந்த சைடிஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெய்பூரை வென்றது டெல்லி!

கிருஷ்ணாபுரத்தில் தற்கொலைக்கு முயன்ற விஏஓ உயிரிழப்பு

லாபா அசத்தல்; பிரிட்ஸ் அதிரடி: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி

டிரம்பப்பின் போா் நிறுத்த திட்டம்: எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சு

25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT