தேவையானவை:
இட்லி மாவு - 2 கிண்ணம்
சின்ன வெங்காயம் - 1 கிண்ணம்
பச்சை மிளகாய் - 3
தேங்காய் துருவல் - கால் கிண்ணம்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க வேண்டிய பொருட்கள்:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைபருப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை: எண்ணெய்யைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிதம் செய்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிது உப்பு சேர்க்கவும். நன்கு வதங்கியதும் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இட்லி மாவில் கொட்டி, நன்கு கலக்க வேண்டும். பின்னர், எண்ணெய்யைக் காய வைத்து, சிறு சிறு போண்டாக்களாகக் கிள்ளிப் போட்டு, நன்கு வெந்ததும் எடுத்தால் இட்லி மாவு போண்டா ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.