’வித்தியாசமனவர்’களை அடுத்து இதில் சிலரை வித்தியாசமாகக் தோன்றச் செய்து இருக்கிறார் டைரக்டர் மெளலி.
விஜயனின் கலைந்த கிராப்பை வகிடு எடுத்து வாரி கலங்கிய கண்களை கண்ணாடி போட்டு மறைத்து இருப்பதோடு ஜெயதேவியையும் பற்பல நவநாகரிக உடைகள் அணிந்து உலவச் செய்து இருக்கிறாரே அது வித்தியாசமில்லையா?
படத்தைப் பார்க்கும் போது, ‘அழியாத கோலங்கள்’ நினைவுக்கு வரக் காரணம், ஷ்யாம்சுந்தர் மட்டுமல்ல, அந்தக் கதவு இடுக்கின் வழியாக அனுமந்து பார்க்கும் செக்ஸ் காட்சியும் தான்.
மானேஜர் பதியாக முடிந்தவரை மானேஜ் செய்திருக்கும் விஜயன், கடற்கரைக் காட்சியில் கண் கலங்க வைத்துவிட்டாரே!
மஞ்சு – ஜெயதேவி நெஞ்சை நிரப்புகிறார். பம்பாய்க்குப் புறப்படும்போது மணிமாலாவைப் பார்த்து, விட்டுத் தானும் முந்தானையை இழுத்து மூடிக் கொள்கிறாரே, அந்த லாவகம் இன்னமும் கண் முன்னாலேயே இருக்கிறது.
பாட்டு டீச்சர் பிருந்தா (மணிமாலா)வை இன்னும் இரண்டு கீர்த்தனைகளையாவது பாட வைத்திருக்கலாம்.
படபடக்கிற வெயிலில் பரிதாபமாகத் தான் நடந்து வருவது தெரியாமல், தன் மகன் மூன்று சக்கர வண்டியை முக்கியவாறே மிதித்துக் கோண்டு வருவதைக் கண்டதும் பதைக்கிறாரே நாயுடுகாரு பூரணம். அங்கே அவரது நடிப்பும் பரிபூர்ணம்.
அலட்டிக் கொள்ளாமல் விசுவும் மிகவும் காஷுவலாக வந்து போகிறார் நித்யா.
மணியான கேரக்டர் மணிக்கு. வாய்ப்பு அளித்தால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் அவரால்.
வசனங்களில் வழக்கமாக மெளலியின் நகைச்சுவை இழையோடிக் கிடக்கிறது. இண்டர்வெலுக்குப் பிறகு படத்தைக் காப்பாற்றி இருப்பது பிரபாகரின் கேமரா.
மற்றவை திரையில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.