சினிமா எக்ஸ்பிரஸ்

ஆரூர்தாஸ் - வெள்ளி விழா கண்ட வசனகர்த்தா!

திரையுலகில் வெள்ளிவிழா கொண்டாடிய கதை,வசனகர்த்தாக்கள் வெகு சிலரே! அன்றும், இன்றும்

உமா ஷக்தி.

திரையுலகில் வெள்ளிவிழா கொண்டாடிய கதை,வசனகர்த்தாக்கள் வெகு சிலரே! அன்றும், இன்றும், என்றும் புகழேணியில் இருக்கிறார் வசனகர்த்தா ஆருர்தாஸ்.அவரது வெற்றியின் பின்னணி என்ன? அவரே சொல்கிறார்.

‘வாழ வைத்த தெய்வம்’ படம்தான் அதற்கு முன்னா. சில எழுதியிருக்கிறேன். சென்னைக்கு வந்தபோது வசனகர்த்தாவாக மாறியது என் வாழ்க்கையில் நடந்த எதிர்பாராத நிகழ்ச்சி. தேவர் அவர்களை வசனம் எழுதும் விஷயமாக குத்தாலத்தில் சந்தித்துப் பேசினேன். அக் கம்பெனிக்கு என்னை சிபாரிசு செய்ததே ஜெமினி கணேசன் தான். தேவர் என்னை கோவைக்கு அழைத்துப் போய், ஆர்.எச்.ஆர்.ஓட்டலில் ரூம் போட்டுக் கொடுத்து வசனம் எழுதச் சொன்னார். அது தேவரின் நாலாவது படம். படத்தில் என்.வி.சுப்பையாவும், டி.எஸ்.முத்தையாவும் ஆடு புலி ஆட்டம் ஆடும் காட்சி, அதற்காக நான் எழுதிய முதல் வசனம் :

‘வெற்றி, வெற்றி. இந்த நாலாவது ஆட்டத்திலும் எனக்குத்தான் வெற்றி’ செண்டிமெண்ட்டாக இந்த வசனம் ரொம்பப் பொருத்தமாக அமைந்தது என்று தேவர் என்னை பாராட்டினார்.’

நீங்கள் வசனம் எழுதிய படங்களில் பெரிதும் திருப்தியளித்தது எது?

பாசமலர் சிவாஜி, ஜெமினி, சாவித்ரி போன்ற தலைசிறந்த நட்சத்திரங்கள் நடித்த படம் அது. வலுவான கதை அதன் ஜீவநாடி. பசுமையாக வசனங்கள் அமைய வேண்டும் என்று நான் பாடுபட்டு எழுதினேன். தவிர, ‘தெய்வ மகன்’ படத்தில் அந்த மூன்றுக்கும் ஏற்றபடி வசனம் எழுத நேர்ந்தது. சிவாஜிக்கும் மூன்று ரோல்கள். அவருக்குப் பெருமை தேடித் தந்த படங்களில் அதுவும் ஒன்று. எம்.ஜி.ஆர். உணர்ச்சிகளைக் கொட்டி நடித்த, ‘பெற்றால்தான் பிள்ளையா?’ ’தாய் சொல்லைத் தட்டாதே’ இரண்டும் எனக்குப் பிடித்த படங்கள்.

மற்றவர்கள் எழுதிய வசனங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது?

சமீபத்தில் ‘சங்கராபரணம்’ படத்தை மூன்று முறை பார்த்து ரசித்தேன். இன்னும் பலமுறை பார்க்கப் போகிறேன். அப்படம் வேற்று மொழியில் இருந்தாலும் பேசுகிற வசனம் என்னவென்று நமக்கும் புரிகிறது. இது கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் டைரக்டரின் வெற்றி.

உங்கள் வசனத்தைப் பெரிதும் விரும்பும் கலைஞர்கள் யார்?

நடிகர்களில் ஜெமினி. அவர்தான் என்னைத் திரையுலகில் புகுத்திவிட்டவரே. டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தரும் நானும் ஒருவருக்கொருவர் விசிறிகள். என் வசனத்தில் அவருக்கு அலாதி நம்பிக்கையும், பிரியமும் உண்டு.

ஒரு படத்துக்கு வசனம் எழுத எவ்வளவு நாட்கள் ஆகும்?

அது கதையைப் பொறுத்தது. ஒரு வாரமும் ஆகலாம். ஒரு மாதமும் பிடிக்கலாம். படப்பிடிப்பின் ஷெட்யூல்களுக்கு ஏற்றபடி பகுதிப் பகுதியாகவும் எழுதுவேன். ஒரே சமயத்திலும் எழுதி முடிப்பேன்.

வசனங்களை எங்கே எழுதுவீர்கள்?

பெரும்பாலும் வீட்டில்தான். சில கம்பெனிகளில் ஓட்டலில் ரூம் போடுவார்கள். ஏவி.எம்.படங்களுக்கு வசனம் எழுத எனக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள கெஸ்ட் ஹவுசில் ‘ரூம்’ போட்டுக் கொடுப்பார்கள். அமைதியான இடம். எஸ்.பி.முத்துராமன் அப்போது உதவி டைரக்டர். நானும் அவரும் படத்துக்குப் படம் காட்சிகளை விவாதித்து ஒரு வாரம், பத்து நாட்கள் அங்கேயே தங்கி, வசனம் எழுதுவோம்.

எழுதும்போது மூட் தேவையா?

எனக்குத் தேவையில்லை. ஆனால் வசனம் எழுதும் போது எனக்கு அடிக்கடி தலைவலி வரும். அப்போது சற்று ஓய்வெடுப்பேன். தினமும் பகல் சாப்பாட்டுக்குப் பின் எனக்கு ஒரு மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். ராணுவ முறையில் செயல்பட்ட தேவர் கூட பகலில் நான் தூங்கி ஓய்வெடுக்க விட்டுவிடுவார்.

எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் செண்டிமெண்டாக ஏதாவது எழுதுவீர்களா?

வேளாங்கண்ணி மாதாவை நினைவிலிருத்தி பேப்பரில் ‘மாதா துணை’ என்று எழுதிவிட்டே நான் செய்யக் காரணகர்த்தாவாக இருந்தவர் திரு. தஞ்சை ராமையாதாஸ் தான்! அவர் கடவுளை நினைத்து ‘அவன் துணை’ என்று எழுதிவிட்டே வசனம் எழுதுவார். அந்த இன்ஸ்பிரேஷன் தான் எனக்கு….

நீங்கள் வசனத்தை ரசித்துப் பார்த்த வேறு படங்கள் ஏதாவது?

தப்புத்தாளங்களில் கே.பாலசந்தரின் வசனம் எழுதியிருந்த முறை என்னைப் பெரிதும் கவர்ந்தது. மற்றொரு மறக்க முடியாத படம் ‘பெக்கட்’ ஆங்கிலப் படம். கதை, வசனம், நடிப்பு எல்லாமே கவர்ந்தது.

நீங்கள் எழுதிய வசனத்தை ரசித்து நடித்த நடிகர் யார்?

நடிகர் திலகம் தான். ‘பட்டாக்கத்தி பைரவன்’ படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் நூறு பக்க வசனம் எழுதினேன். அப்புறம் நானே அதை ஐம்பது பக்கமாக்கினேன். அந்தப் படத்துக்கு அத்தனை வசனமும் தேவை.

அந்த வசனம் பூராவும் நடிகர் திலகம் சிவாஜி ரசித்து ரசித்துக் கேட்டு நின்று கொண்டே பேசினார். மறக்க முடியாத நிகழ்ச்சி.

வரவிருக்கும் படங்கள் பற்றி….

‘கெளரி’ ‘சத்திய சுந்தரம்’ படங்களில் மனநிறைவுடன் வசங்கள் எழுதியுள்ளேன். திரையுலகில் நான் எல்லோருக்குமே வேண்டியவன். அரசியலுக்கு அப்பாற்பட்டவன். அத்தனை பேரும் எனது நண்பர்கள். இதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!

பேட்டி – மன்னை செளரிராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT