ஏற்காட்டில் ‘விடியும் வரை காத்திரு’ படத்தின் ஷுட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஏரிக்குள் சத்யகலா நிற்பது போல் சீன் அமைய வேண்டும். கேமரா சுழல ஆறு டேக் எடுத்தார் பாக்யராஜ். உடனே சத்தியகலா ‘சார் தண்ணீருக்குள் மீன் நிறைய இருக்குது. கடிக்குது என்று சொன்னார். அதற்குப் பாக்கியராஜ் ‘அட என்னம்மா, இந்த மீனுக்கெல்லாம் இப்படி பயப்படுகிறியே? ஒண்ணும் செய்யாது’ என்று கூறிவிட்டு அவரும் தண்ணீருக்குள் இறங்கிக் கொண்டார். மீண்டும் கேமரா சுழன்றது. சத்யகலாவைக் கடித்த மீன்கள் பாக்கியராஜையும் பதம் பார்த்தது. ‘ஐயோ நீ சொன்னப்ப அசட்டையாக இருந்தேன். நானும் அந்த கஷ்டத்தை அனுபவிக்கும்போது தான் இந்த மீன்களின் தொல்லைகளைப் புரிந்து கொண்டேன். பட்டால்தான் புத்தி வரும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்!’ என்று பாக்கியராஜ் வேடிக்கையாகக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.