சினிமா எக்ஸ்பிரஸ்

பைத்தியம் கேட்ட கேள்வி!

ஒரு படத்தில் தனக்குக் கிடைத்த பாகத்தைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தார் சந்திரபாபு

உமா ஷக்தி.

ஒரு படத்தில் தனக்குக் கிடைத்த பாகத்தைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தார் சந்திரபாபு. இதற்கு ஒரு பைத்தியத்தை நேரில் சந்திக்க வேண்டியிருந்தது. டைரக்டர் திருமலையுடன் ஒரு மன நோய் ஆஸ்பத்திரிக்குச் சென்றார் பாபு.

அங்கே ஒரு பைத்தியத்திடம் மெல்லப் பேச்சுக் கொடுத்த சந்திர பாபு தன்னை ஒரு சினிமா நடிகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

‘தெரியுமே நீங்க சந்திரபாபு, இது கூடத் தெரியாதா எனக்கு? என்றார் அவர்.

தொடர்ந்து அந்தப் பைத்தியக்காரர் கேட்டார், ‘இந்த உலகத்தில் மொத்தம் எத்தனை நடிகர்கள் இருக்கின்றனர்?’

சந்திர பாபு ரொம்பக் கரெக்டாகச் சொல்வது போல, மனக் கணக்காகப் போட்டு கூட்டி, ‘ஏழு லட்சத்திப் பத்தாயிரத்து தொண்ணுற்றொன்பது பேர்!’ என்றார். தான் சொல்வதை அந்தப் பைத்தியம் நம்பிவிடும் என்றூ எண்ணினார் அவர்.

அதற்கு அவர் பதில் சொன்னார், ‘ என்னய்யா! இது கூட உமக்குத் தெரியவில்லையே! இந்த உலகம் என்ற மேடையில் உயிர்வாழும் எல்லா மனிதர்களுமே நடிகர்கள்தானே!’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT