சினிமா எக்ஸ்பிரஸ்

ரசிகர்களுக்குப் ப்ரியா..ஸ்ரீப்ரியா

கிடைத்த வாய்ப்பை வகையாகப் பயன்படுத்திக் கொண்ட பெருமை ஸ்ரீப்ரியாவைச் சாரும். நாட்டிய நடிகையாகவே தன் கலை உலக வாழ்க்கை அமைந்துவிடுமோ என்ற எண்ணம் இவருக்கு ஒரு காலத்தில் இருந்தது

உமா ஷக்தி.

கிடைத்த வாய்ப்பை வகையாகப் பயன்படுத்திக் கொண்ட பெருமை ஸ்ரீப்ரியாவைச் சாரும். நாட்டிய நடிகையாகவே தன் கலை உலக வாழ்க்கை அமைந்துவிடுமோ என்ற எண்ணம் இவருக்கு ஒரு காலத்தில் இருந்தது என்றாலும், அதற்கு மாறாகச் சினிமா உலகப் பிரவேசம் சிறப்புற இவரைச் செப்பனிட்டுத் தந்திருக்கீறது.

வெடுக் வெடுக்கென்று பேசும் திறமை மட்டுமல்ல, பேசும் விழிகளும் இவருக்குண்டு. ‘ஆட்டுக்கார அலமேலு’ பாத்திரமாகட்டும், அயல்நாட்டு நவநாகரிகப் பாத்திரமாகட்டும், பொல்லாத ‘பில்லா’வுக்கு ஈடு கொடுக்கும் கவர்ச்சிக் காதலியாகட்டும் – எல்லாவற்றிலுமே தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார் ஸ்ரீப்ரியா.

எத்தனையோ கவர்ச்சிகரமான படம் பாத்திரங்களை இவர் ஏற்றிருந்தாலும் டைரக்டர் ருத்ரய்யாவின் படமான ‘அவள் அப்படித்தானில்’ இவர் ஏற்றிருந்த பாத்திரமே இவருடைய தகுதியைச் சிகரத்துக்கு உயர்த்தி உள்ளது.

‘எனக்குப் பிடித்த கதாபாத்திரம் அதுதான்’ என்று இவரே ஒப்புக் கொள்கிறார்.

நட்சத்திரப் புகழை விரைவாக இவர் எட்டிப் பிடித்திருந்தாலும் நட்சத்திரமாக நடித்திருக்கும் படம் இப்பொழுதுதான் வந்திருக்கிறது!

ஸ்ரீப்ரியா எது போன்ற பாத்திரமேற்று நடிக்கத் தகுதியானவர்? என்ற வினாவை எழுப்பினால் பதில் சொல்வது சிரமம்தான். ஏனெனில் எப்படிப்பட்ட பாத்திரத்திற்கும் ஈடு தரும் இணையற்ற திறமை இவரிடம் குவிந்து கிடக்கிறது.

ப்ரியா, ரசிகர்களுக்குப் ப்ரியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT