ஆராய்ச்சிமணி

சுரங்கப் பாதை சந்திப்பில் தேவை காவலர் பணி

சென்னை, ஹாரிங்டன் சாலையில் ரயில் வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்தச் சந்திப்பில், பச்சையப்பன் கல்லூரியில் இருந்து வரும் வாகனங்கள் சுரங்கப்பாதையின் மேற்புறம் சுற்றி வந்து, சூளைமேடு நெடுஞ்சாலையை

DIN


சென்னை, ஹாரிங்டன் சாலையில் ரயில் வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்தச் சந்திப்பில், பச்சையப்பன் கல்லூரியில் இருந்து வரும் வாகனங்கள் சுரங்கப்பாதையின் மேற்புறம் சுற்றி வந்து, சூளைமேடு நெடுஞ்சாலையை நோக்கிச் செல்ல முடியும். மறுபுறத்தில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள், நமசிவாயபுரம் பாலத்தில் இருந்து நேராக உள்ள சிறிய சந்தில் நுழைந்து ஹாரிங்டன் சாலைக்கு வருகின்றன. சிறிய சந்து என்பதால் ஒரு வழிப் பாதையாக்கப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சந்திப்பில் போக்குவரத்து காவலர் நிற்காததால், பச்சையப்பன் கல்லூரியில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தவறான வழியில் வந்து இந்தச் சந்தில் நுழைந்து விடுகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சாலையும் அடிக்கடி சேதமடைந்து விடுகிறது. எனவே, இந்தச் சந்திப்பில், முழு நேரமும்  போக்குவரத்து காவலரை பணியமர்த்தி, தவறான வழியில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எ.பத்மநாபன், ஷெனாய்நகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT