முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 15 – திருத்தோணோக்கம் 7

எதுவும் அறியாத அடியவன் நான், சிறந்த பரம்பொருளான சிவபெருமானை வணங்காமல் இத்தனை நாள்களை வீணாக்கிவிட்டேன்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:08 PM
பகிர்:

தோளைப் பார்த்துப் பாடுவது தோள்நோக்கம், அல்லது, தோணோக்கம், இரு தோழியர் ஒருவர் தோளை ஒருவர் பார்த்துப் பாடியபடி விளையாடுவது, அல்லது, வெற்றியடைந்த மன்னன் ஒருவனுடைய வீரத்தோளைப் பார்த்துப் பிறர் பாடுவதைத் தோணோக்கம் என்பார்கள். அவ்வகையில் சிவபெருமானின் பெருமைகளை மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.

இப்பகுதியில் பதினான்கு பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.

104

பாடலின்பம்

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலம்எல்லாம்

பாழுக்குஇறைத்தேன் பரம்பரனைப் பணியாதே,

ஊழிமுதல் சிந்தாத நல்மணி வந்துஎன் பிறவித்

தாழைப் பறித்தவா தோள்நோக்கம் ஆடாமோ.

*

உரைமாண்ட உள்ஒளி உத்தமன் வந்து உளம்புகலும்

கரைமாண்ட காமப் பெரும்கடலைக் கடத்தலுமே

இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்துஓடத்

துரைமாண்டவா பாடித் தோள்நோக்கம் ஆடாமோ.

பொருளின்பம்

எதுவும் அறியாத அடியவன் நான், சிறந்த பரம்பொருளான சிவபெருமானை வணங்காமல் இத்தனை நாள்களை வீணாக்கிவிட்டேன், எனினும், ஊழிக்காலத்திலும் அழியாமல் நிலைத்திருக்கும் நல்ல மணியான சிவபெருமான் தானே வந்து என்னுடைய பிறவியின் வேரை அறுத்தான், அந்தக் கருணையைப் பாடி நாம் தோள்நோக்கம் ஆடுவோம்.

*

சொல்லில் அடங்காத உள்ளொளியான உத்தமன் சிவபெருமான், அவன் வந்து என்னுடைய உள்ளத்தில் புகுந்தவுடன், கரையில்லாத காமப் பெருங்கடலை நான் கடந்துவிட்டேன், என்னுடைய இந்திரியங்கள் என்கிற பறவைகள் தங்களுக்கு இரை கிடைக்காமல் எங்கோ பறந்துவிட்டன, ‘நான்’ என்கிற துரைத்தனமும் சென்றுவிட்டது, இதைப் பாடி நாம் தோள்நோக்கம் ஆடுவோம்.

சொல்லின்பம்

ஏழை: அறியாதவன்

தொழும்பன்: அடியவன்

பாழுக்கு: வீணாக

பரம்பரன்: சிறந்த பரம்பொருள்

ஊழி: யுகமுடிவுக்காலம்

சிந்தாத: அழியாத

தாழ்: வேர்

பறித்தவா: பறித்த தன்மை

உரை: சொல்

மாண்ட: கடந்த

உளம்: உள்ளம்

புகலும்: புகுந்தவுடன்

இரிந்து: கெட்டு

துரை: துரைத்தனம்/ கர்வம்

மாண்டவா: மறைந்த தன்மை

முழு கட்டுரையைப் படிக்க →