முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 211

சில நூல்களைக் கற்று, அவற்றைப் பொருளில்லாமல் ‘கலகல’ என்ற ஓசையோடு உளறுவது ஒழிக்க வேண்டிய ஒன்று....

Updated On : 15 ஏப்ரல், 2016 at 10:07 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:31 PM

பதச் சேதம்

சொற் பொருள்

கல கல என சில கலைகள் பிதற்றுவது ஒழிவது உனை சிறிது உரையாதே

Advertisement

கலகலவென: பொருளில்லாமல்; கலைகள்: நூல்கள்; ஒழிவது: ஒழித்து, விட்டுவிட்டு;

கரு வழி தத்திய மடு அதனில் புகு கடு நரகுக்கு இடை இடை வீழா

கருவழி தத்திய: பிறவியாகிய கருப்பாதையில் செலுத்தும்; மடு: பள்ளம்; நரகுக்கிடை: நரகத்தின் நடுவில்; இடைவீழா: விழுந்திடாமல்;

உலகு தனில் பல பிறவி தரித்து அற உழல்வது விட்டு இனி அடி நாயேன்

பிறவி தரித்து: பிறவியை எடுத்து; உழல்வது: துன்பப்பட்டு திரிவது;

உனது அடிமை திரள் அதனினும் உட்பட உபய மலர் பதம் அருள்வாயே

அடிமைத் திரள்: அடியார் திருக்கூட்டம்; உபய: இரண்டு;

குலகிரி பொட்டு எழ அலைகடல் வற்றிட நிசிசரனை பொரு மயில் வீரா

குலகிரி: பெரியவையான ஏழு பர்வதங்கள்; பொட்டெழ: பொடிபட; நிசிசரன்: இரவில் உலவுபவன்—அரக்கன்;

குண தர வித்தக குமர புனத்திடை குற மகளை புணர் மணி மார்பா

குணதர: நற்குணத்தவனே; வித்தக: ஞான மூர்த்தியே; மணி: அழகு (பலபொருளில் ஒன்று);

அலை புனலில் தவழ் வளை நிலவை தரு மணி திருவக்கரை உறைவோனே

வளை: சங்கு; நிலவைத் தரு: ஒளியை உமிழ்கின்ற;

அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்து அருள் பெருமாளே.

கலகலெனச்சில கலைகள் பிதற்றுவது ஒழிவ(து)... சில நூல்களைக் கற்று, அவற்றைப் பொருளில்லாமல் ‘கலகல’ என்ற ஓசையோடு உளறுவது ஒழிக்க வேண்டிய ஒன்று;

உனைச்சிறிதுரையாதே ...சற்றேனும் உன்னைத் துதிக்காமலும்;

கருவழி தத்திய மடுவதனிற் புகு ... பிறவியில் செலுத்துவதான கருக்குழிக்குள் வேகமாக வீழ்த்தும் பள்ளத்திலே புகுந்து,

கடுநரகுக்கிடை யிடைவீழா ... வெம்மையான நரகத்துக்கு நடுவிலே விழுந்துவிடாமல்,

உலகு தனிற்பல பிறவி தரித்து ... இந்த உலகத்திலே பலவிதமான பிறவிகளை எடுத்து,

அறவுழல்வது விட்டினி அடிநாயேன்... பெரிதும் துன்பத்தான் உழன்று திரிவதை விட்டு, கீழான நாய்போன்ற அடியேன்,

உனதடிமைத்திரள் அதனினும் உட்பட ... உன்னுடைய அடியார் திருக்கூட்டத்தின் உள்வட்டத்தில் ஒருவனாகும்படி,

உபய மலர்ப்பதமருள்வாயே ... உன்னுடைய இரண்டு மலர்ப்பாதங்களையும் தந்தருள வேண்டும்.

குலகிரி பொட்டெழ ... கிரெளஞ்சமலை உள்ளிட்ட குலபர்வதங்கள் தூளாகும்படியும்;

அலைகடல் வற்றிட ... அலைவீசுகின்ற கடல் முற்றிலும் வற்றிப் போகும்படியும்;

நிசிசரனைப்பொரும் அயில்வீரா ... (நிசி: இரவு, சரன்: திரிபவன் nocturnal) இரவில் திரியும் அசுரனான சூரபத்மனோடு போரிட்ட வேலை உடைய வீரனே!

குணதர வித்தக குமர ... நற்குணத்தவனே, ஞானமூர்த்தியே, குமரனே,

புனத்திடை குறமகளைப்புணர் மணிமார்பா ... தினைப்புனங்களுக்கு நடுவில் குறத்தியான வள்ளியை மணந்த அழகிய மார்பனே!

அலைபுனலிற்றவழ் ... அலை வீசும் நீரில் தவழ்வதான (திருவக்கரைத் தலத்துக்கருகே சங்கரபரணி என்ற ஆறு ஓடுகிறது)

வளைநிலவைத்தரு ... சங்குகள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்

மணிதிருவக்கரை யுறைவோனே ... அழகிய திருவக்கரைத் தலத்தில் வீற்றிருப்பவனே,

அடியவர் இச்சையில் எவையெவை யுற்றனஅவை ... அடியார் மனங்களில் எழும் விருப்பங்கள் எத்தனையோ, அத்தனையையும்,

தருவித்தருள் பெருமாளே. ... அவர்கள் அடையச் செய்து (விருப்பங்களை நிறைவேற்றி) அருளும் பெருமாளே!

சுருக்க உரை

நற்குணத்தவனே!  ஞானமூர்த்தியே!  குமரனே!  தினைப்புனத்தினிடயே குறமகளான வள்ளியைத் தழுவிய அழகான மார்பனே!  அலைவீசும் நீரிலே தவழும் சங்குகள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் திருவக்கரைத் தலத்தில் வீற்றிருப்பவனே!  அடியார்களுடைய அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் கருணாமூர்த்தியான பெருமாளே!

ஒருசில நூல்களைப் படித்து, அவற்றை உணர்ந்தும் உணராமலும் பொருளற்ற முறையில் பிதற்றித் திரிவது ஒழியவேண்டும்; சிறிதேனும் உன்னைத் துதிக்காமல், கருப்பாதையில் விழுவதற்கான பள்ளத்தில் விழுந்தும், பற்பல பிறவிகளை எடுத்தும் துன்பத்தில் உழலும் நாயினும் கடையேனாகிய அடியேன், உனது அன்பர்கள் திருக்கூட்டத்தின் மையத்திலே விளங்கும்படியாக உன்னுடைய இரண்டு மலர்த்திருப் பாதங்களையும் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.