முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 217

மலையாடுகளின் கூட்டங்களையும்; கரடுமுரடான அகில், மருதம் போன்ற பெரிய மரங்களைச் சாய்த்து அவற்றை அடித்துக்கொண்டு

Updated On : 19 ஏப்ரல், 2016 at 12:09 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:34 PM

பதச் சேதம்

சொற் பொருள்

கருடன் மிசை வரு கரிய புயல் என கமல மணி என உலகோரை

Advertisement

மிசை: மேலே; கரிய புயல்: கருமேகம்; கமல: பதுமநிதி; மணி: சிந்தாமணி;

கதறி அவர் பெயர் செருகி மனம் அது கருதி முது மொழிகளை நாடி

அவர் பெயர் செருகி: (பாடுகின்ற பாடலில்) அவருடைய பெயரை நுழைத்து; முதுமொழிகளை நாடி: அவ்வாறு நுழைக்க, சிறப்பான பழைய மொழிகளைத் தேடி;

திருடி ஒரு படி நெருடி அறிவிலர் செவியில் நுழைவன கவி பாடி

திருடி: அந்த மொழிகளிலிருந்து திருடி; ஒருபடி நெருடி: அவற்றைச் சற்றே மேலானவையாகத் திரித்து; அறிவிலர்: அறிவற்றவர்கள்;

திரியும் அவர் சில புலவர் மொழிவது சிறிதும் உணர் வகை அறியேனே

வருடை இனம் அது முருடு படும் அகில் மரமும் மருதமும் அடி சாய

வருடை: மலையாடு; முருடுபடும்: கரடுமுரடாக உள்ள;

மதுரம் எனு(ம்) நதி பெருகி இரு கரை வழிய வகை வகை குதி பாயும்

குருடி மலை உறை முருக குல வட குவடு தவிடு எழ மயில் ஏறும்

வடகுவடு: கிரெளஞ்ச மலை; தவிடு எழ: தவிடுபட;

குமர குருபர திமிர தினகர குறைவில் இமையவர் பெருமாளே.

திமிர: (அஞ்ஞானமாகிய) இருளுக்கு;

கருடன் மிசை வரு கரிய புயல் என... உலகத்தவரை, ‘கருடனில் ஏறிவரும் திருமாலே நீர்தாம்’ என்றும்;

கமல மணி என உலகோரை ... நீரே பதுமநிதி, நீரே சிந்தாமணி என்றும்;

தாமரை (பதும நிதி), சிந்தாமணி நீ என்றும் உலகத்தில் உள்ளவர்களை

கதறி அவர் பெயர் செருகி மனம் அது கருதி ... கூப்பாடு போட்டு; அவருடைய பெயரைப் பாட்டிலே நுழைத்து, அவ்வாறு நுழைப்பதற்காக,

முது மொழிகளை நாடி ... நல்ல, அழகான பழையை மொழிகளை, வழக்காறுகளைத் தேடி,

திருடி ஒரு படி நெருடி ... (அந்தப் பழைய மொழிகளிலிருந்து சொற்களைத்) திருடிக் கொண்டும், அவற்றை சற்றே மேம்படும்படித் திரித்தும்,

அறிவிலர் செவியில் நுழைவன கவி பாடி ... அறிவற்றவர்களுடைய காதுகளில் வீணே விழும்படியாகக் கவிதை பாடி,

திரியும் அவர் சில புலவர் மொழிவது ... சில புலவர்கள் திரிகிறார்கள்.  அவர்கள் சொல்வதனை,

சிறிதும் உணர் வகை அறியேனே ... நான் சற்றும் உணர்ந்து அறியும் வழியைத் தெரியாதவன்.

வருடை இனம் அது... கூட்டமான மலையாடுகளும்;

முருடு படும் அகில் மரமும் மருதமும் அடி சாய ... கரடுமுரடான அகில், மருதம் போன்ற மரங்கள் பெயர்ந்து விழும்படியாக,

மதுரம் எனு(ம்) நதி பெருகி இரு கரை வழிய ... இரண்டு கரைகளிலும் வெள்ளம் பெருகியோடும் மதுரம் என்ற ஆறு,

வகை வகை குதி பாயும் ...பற்பல விதங்களில் துள்ளிப் பாய்கின்ற,

குருடி மலை உறை முருக ... குருடி மலையில் வீற்றிருக்கும் முருகனே,

குல வட குவடு தவிடு எழ மயில் ஏறும் ... வடக்கிலிருந்த குலபர்வதமான கிரெளஞ்சமலை தவிடுபொடியாகும்படி மயிலிலே ஏறுகின்ற,

குமர குருபர திமிர தினகர ... குமரனே, குருபரனே, அஞ்ஞான இருளுக்கு ஓர் சூரியனே,

குறைவில் இமையவர் பெருமாளே. ... குறைவில்லாத தேவர்களின் பெருமாளே

சுருக்க உரை

மலையாடுகளின் கூட்டங்களையும்; கரடுமுரடான அகில், மருதம் போன்ற பெரிய மரங்களைச் சாய்த்து அவற்றை அடித்துக்கொண்டு போகும்படி இரண்டு கரைகளையும் தொட்டவண்ணம் வெள்ளம் குதித்துப் பாயும் மதுரநதி ஓடுகின்ற குருடிமலையில் வீற்றிருப்பவனே!  கிரெளஞ்ச மலை தூளாகும்படி மயிலேறும் குமரனே, குருபரனே குறைவற்ற தேவர்களுடைய பெருமாளே!

சிலபுலவர்கள், உலகத்தவர்களை, ‘நீர்தாம் கருடனில் வரும் திருமால், நீர்தாம் பதுமநிதி, நீர்தாம் சிந்தாமணி’ என்றெல்லாம் புகழ்ந்து பாடி, பழைய வழக்காறுகளையும் முதுமொழிகளையும் தேடி எடுத்து, அவற்றில் இவர்களுடைய பெயரை நுழைத்து, இந்த அறிவற்றவர்களின் காதுகளில் விழாதா என்ற ஆசையோடு பாடித் திரிகிறார்கள்.  நான் இந்தவகையான வழிமுறையைச் சற்றும் அறியாதவன்.  (நான் இவ்விதமே தொடர்ந்து இருக்க அருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.