முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 320

‘தான்தோன்றி மாடம்’ என்னும் தலத்துக்கான பாடலிது.  இத்தலம் இந்நாளில் ‘ஆக்கூர்’ என்றழைக்கப்படுகிறது.  இங்குள்ள சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்குத் ‘தான்தோன்றியப்பர்’ என்று பெயர். 

Updated On : 29 ஜூலை, 2016 at 3:26 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:35 PM

‘தான்தோன்றி மாடம்’ என்னும் தலத்துக்கான பாடலிது.  இத்தலம் இந்நாளில் ‘ஆக்கூர்’ என்றழைக்கப்படுகிறது.  இங்குள்ள சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்குத் ‘தான்தோன்றியப்பர்’ என்று பெயர்.  தானே தோன்றியவர் என்பதால் சுயம்பு, சுயம்புலிங்கம் என்னும் பொருள்படும் பெயர் இது.  ‘அப்பர் பாடல் பெற்ற இத்தலம், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது’ என்று விக்கிபீடியா குறிப்பிடுகிறது.  (http://tiny.cc/nambdy) திருவடிகளைத் தொழும் வரத்தைக் கேட்கும் இந்தப் பாடலில், ‘நீரால் அமைந்த தூண்போன்ற உடல்’ என்றும், ‘பொற்கலப்பையால் நிலத்தை உழுது வரகு விதைப்பதைப் போல்’ என்றும் ஆச்சரியமான உவமைகள் வந்து விழுகின்றன.  பொருளை நாளைக்குக் காண்போம்.  அடிக்கு 25 எழுத்துகள் உள்ள இந்தப் பாடலில், 2, 4, 9, 11, 16, 18 ஆகிய எழுத்துகள் மெல்லின மெய்யால் அமைந்தவை. 

தாந்தாந்த தத்ததன தாந்தாந்த தத்ததன
      தாந்தாந்த தத்ததன                  தனதான

சூழ்ந்தேன்ற துக்கவினை சேர்ந்தூன்று மப்பில்வளர்
         தூண்போன்ற இக்குடிலு          முலகூடே
      சோர்ந்தூய்ந்து மக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடு
         தோம்பாங்கை யுட்பெரிது         முணராமே
வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள்
         வேண்டீங்கை யிட்டுவர          குழுவார்போல்
      வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளை
         வாம்பாங்கில் நற்கழல்கள்        தொழஆளாய்
வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள்
         வான்தோன்று மற்றவரு          மடிபேண
      மான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்புயமும்
         வான்தீண்ட வுற்றமயில்          மிசையேறித்
தாழ்ந்தாழ்ந்த மிக்ககடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர்
         சாய்ந்தேங்க வுற்றமர்செய்        வடிவேலா
      தான்தோன்றி யப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வ
         தான்தோன்றி நிற்கவல           பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/275894647&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.