பகுதி - 321
நல்வாழ்வையும், மேலானதும் செம்மையானதுமான நெறிகளையும் வாய்க்கப் பெற்றவர்களான தவமுனிவர்களும்;
பதச் சேதம் | சொற் பொருள் |
சூழ்ந்து ஏன்ற துக்க வினை சேர்ந்து ஊன்றும் அப்பில் வளர் தூண் போன்ற இக்குடிலும் உலகு ஊடே Advertisement
| ஏன்ற: நடக்கின்ற, சம்பவிக்கின்ற; அப்பில்: தண்ணீரில்; உலகூடே: உலகினிடையே; |
சோர்ந்து ஊய்ந்தும் அக்கினியில் நூண் சாம்பல் பட்டுவிடு தோம் பாங்கை உள் பெரிதும் உணராமே
| ஊய்ந்து: பதனழிந்து, அழுகிக் கெட்டுப் போய்; நூண் சாம்பல்: நுண்ணிய சாம்பல் (நுண்—நூண்: நீட்டல் விகாரம்; தோம்: குற்றம்; உள்: உள்ளே, உள்ளத்தில்; |
வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல்
| வீழ்ந்து: விரும்பி; ஈண்டி: ஒன்று சேர்ந்து, கூடி; தோண்டி: ஆராய்ந்து; ஈங்கை: பொற்கலப்பை; |
வே(கு)ம் பாங்கும் அற்று வினையா(கு)ம் பாங்கும் அற்று விளைவா(கு)ம் பாங்கில் நல் கழல்கள் தொழ ஆளாய்
| வேம்: (உள்ளம்) வேகின்ற; பாங்கு: தன்மை; |
வாழ்ந்து ஆன்ற கற்புடைமை வாய்ந்து ஆய்ந்த நல் தவர்கள் வான் தோன்று மற்றவரும் அடிபேண

மான் போன்ற பொன் தொடிகள் தாம் தோய்ந்த நல் புயமும் வான் தீண்ட உற்ற மயில் மிசை ஏறி
| பொன் தொடிகள்: பொன் வளையல்கள், பொன் வளையல்களை அணிந்த வள்ளி, தேவானையர்; |
தாழ்ந்து ஆழ்ந்த மிக்க கடல் வீழ்ந்து ஈண்டு வெற்பு அசுரர் சாய்ந்து ஏங்க உற்று அமர் செய் வடிவேலா
| ஈண்டு: நெருக்கமாகக் கூடியுள்ள; வெற்பு: மலை; அமர்: போர்; |
தான் தோன்றியப்பர் குடி வாழ்ந்து ஈன்ற நல் புதல்வ தான் தோன்றி நிற்க வ(ல்)ல பெருமாளே. |

சூழ்ந்து ஏன்ற துக்க வினை சேர்ந்து ஊன்றும் ... சூழ்ந்திருப்பதும், சம்பவிப்பதுமான, துக்கத்தைத் தரும் வினைகள் ஒன்றுசேர்ந்து ஊன்றி நிலைபெறுவதற்கு (இடமானதும்);

அப்பில் வளர் தூண் போன்ற இக்குடிலும் உலகு ஊடே சோர்ந்து ... நீராலே அமைந்து வளர்கின்ற தூணைப் போன்றதுமான இந்த உடல், உலகத்தினிடையே தளர்ச்சியுற்று;

ஊய்ந்தும் அக்கினியில் நூண் சாம்பல் பட்டுவிடு தோம் பாங்கை உள் பெரிதும் உணராமே ... தன் திண்மையை இழந்து, கெட்டுப்போய், தீயில் நுண்மையான சாம்பல் பொடியாக மாறிவிடும் என்ற குற்றம் நிறைந்தது என்ற தன்மையை மனத்துக்குள்ளே ஆழ்ந்து உணராதபடி;

வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி... விரும்பி (அறிஞர்களோடு) கூடி, நல்ல ஞானமிக்க நூல்களை ஆழமாக ஆராய்ந்து அறிந்து (அறிந்த பின்னும்),

மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல் ... ஏராளமான பொருளைத் விரும்பித் தேடி (அதற்காக), பொற்கலப்பையைக் கொண்டு வரகுக்காக உழுபவர்களைப் போல;

வே(கு)ம் பாங்கும் அற்று வினையா(கு)ம் பாங்கும் அற்று விளைவா(கு)ம் பாங்கில் நல் கழல்கள் தொழ ஆளாய் ... மனம் வெந்துபோகும் தன்மையை அழித்து; வினைகள் பெருகுகின்ற நிலைமையையும் அழித்து; (நற்கதி) விளைகின்ற தன்மையை அடையும்படி, உன்னுடைய நல்ல திருவடிகளை அடியேன் தொழும்படியாக ஆண்டருள வேண்டும்.

வாழ்ந்து ஆன்ற கற்புடைமை வாய்ந்து ஆய்ந்த நல் தவர்கள் ... வாழ்வு பெற்று; மேலானதும் செம்மையானதுமான நெறிகள் வாய்க்கப் பெற்று; ஆய்ந்த ஒழுக்கத்தில் நிலைபெற்றிருக்கும் நல்ல தவசிகளும்;

வான் தோன்று மற்றவரும் அடிபேண ... வானுலகத்தில் உள்ள பிறரும் (தேவர்களும்) உன்னுடைய திருவடிகளைப் போற்ற;

மான் போன்ற பொன் தொடிகள் தாம் தோய்ந்த நல் புயமும் ... மான் போன்றவர்களும்; பொன்னாலான வளையல்களை அணிந்தவர்களுமான வள்ளி தேவானை அம்மையர் இருவரும் சாய்ந்திருப்பதான நல்ல புயங்களும் (தோன்றும்படியாக),

வான் தீண்ட உற்ற மயில் மிசை ஏறி ... ஆகாயத்தில் படியும்படியாக (எழுந்து பறக்கக்) கிளம்புடியான மயிலின்மேல் ஏறிக்கொண்டு,

தாழ்ந்து ஆழ்ந்த மிக்க கடல் வீழ்ந்து ஈண்டு வெற்பு அசுரர் சாய்ந்து ஏங்க உற்று அமர் செய் வடிவேலா ... (பாதாளம் வரையில்) தாழ்ந்து ஆழமாக உள்ள கடலுக்குள்ளே (நுழைந்து), கூட்டமாக நெருங்கியிருந்த, மலைகளில் வாழ்ந்த அசுரர்கள் விழுந்து வருந்தும்படியாகப் போர் செய்த வடிவேலனே!

தான் தோன்றியப்பர் குடி வாழ்ந்து ஈன்ற நல் புதல்வ ... தான்தோன்றியப்பர் என்ற திருநாமத்தை உடையவரான சிவபிரான் தன் தேவியோடு குடிகொண்டிருந்து பெற்ற நல்ல குமரனே!

தான் தோன்றி நிற்க வ(ல்)ல பெருமாளே. ... சுயம்புவாய்த் தானே தோன்றி நிற்க வல்லவனாகிய பெருமாளே!

சுருக்க உரை

நல்வாழ்வையும், மேலானதும் செம்மையானதுமான நெறிகளையும் வாய்க்கப் பெற்றவர்களான தவமுனிவர்களும்; வானுலகத்துத் தேவர்களும் உன் திருவடிகளை விளங்கிப் போற்றவும்; மான்போன்றவர்களும், பொன்னாலான வளையல்களை அணிந்தவர்களுமான வள்ளி தேவானையம்மையர் சாய்ந்திருக்கும் தோள்கள் வெளிப்பட்டுத் தோன்றும்படியாக, வானைத்தை அளாவ எழும்பிப் பறக்கும் மயில்மீது அமர்ந்துகொண்டு, பாதாளம்வரை ஆழ்ந்துள்ள கடலுக்குள் புகுந்து மறைந்துகொண்ட கூட்டமான மலைவாழ் அசுரர்கள் வருந்தி வீழும்படிப் போரிட்ட வேலவனே! தான்தோன்றியப்பர் என்ற திருநாமத்தை உடைய பரமசிவனார் தன் தேவியோடு குடிகொண்டு விளங்கிப் பெற்ற மகனே! சுயம்பு மூர்த்தியாக நிற்கவல்ல பெருமாளே!

சூழ்ந்து கொள்வதும், தொடர்ந்து சம்பவிப்பதுமான துக்கவிலைனகள் ஒன்றுகூடி நிலைகொள்வதற்கு இடமானதும்; தண்ணீரால் அமைந்து வளர்கின்ற தூணைப் போன்றதுமான இந்த உடல், தன் தன்மைகெட்டு, தீயில் விழுந்து, பிடி சாம்பலாக மாறப்போகின்ற தன்மையை மனத்தினுள்ளே ஆழமாக உணராமலும்; நல்ல நூல்களை, நல்லறிஞர்களோடு கூடியிருந்து ஆழ்ந்து கற்று (பெற்ற அறிவைக் கொண்டு) பொன்னாலான கலப்பையால் வரகு (வரகைப் போன்ற சாதாரணமான தானியங்களுக்காக) உழுபவர்களைப் போல பொருளைத் தேடித்திரிந்து (பொன் கலப்பையைப் போன்ற அறிவைக் கொண்டு அற்பமான பொருளை வேண்டிப் பாடுபட்டு), மனம் வெந்துபோகும் நிலைமையை அழித்து; வினை பெருகுகின்ற நிலைமையையும் அழித்து; நற்கதி விளையும்படியான நிலைமைய அடையும்படி உன்னுடைய திருவடிகளை அடியேன் தொழும்படியாக அடியேனை ஆண்டுகொள்வாயாக.