பகுதி - 322
இது திருச்செந்தூர் தலத்துக்கான பாடல். ‘மனக் கவலை கொண்டு அறிவு மயங்கும் என்னை அன்புடன் ஆண்டருள்வாள்’ என்று வேண்டுகிறது.
இது திருச்செந்தூர் தலத்துக்கான பாடல். ‘மனக் கவலை கொண்டு அறிவு மயங்கும் என்னை அன்புடன் ஆண்டருள்வாள்’ என்று வேண்டுகிறது.
அமைப்பு முறையிலே மிக எளிமையானது என்றாலும் இந்தப் பாடலிலே அடிக்கு ஒற்றொழித்து முப்பத்திரண்டு எழுத்துகளும், 15, 16, 31, 32 ஆகிய எழுத்துகள் மட்டுமே நெடிலாகவும் மற்ற அனைத்து எழுத்துகளும் குறிலாகவும் அமைந்துள்ளன. (ஒற்று உட்பட) 10, 14, 26, 30 ஆகிய எழுத்துகள் மெல்லின மெய்; 12, 16, 28, 32 ஆகிய எழுத்துகள் வல்லின மெய். கடைசியாகப் பயிலும் தொங்கல் சீரை விட்டுவிட்டால் மற்ற எந்த இடத்திலும் இடையின மெய் பயிலவே இல்லை என்பதைப் பார்க்கலாம். (இதைத்தான் மிக எளிய அமைப்பு என்கிறோம்!) பாடலைப் பார்ப்போம்.
தனதன தனதன தந்தத் தந்தத் தனதானா
தனதன தனதன தந்தத் தந்தத் தனதானா
பரிமள களபசு கந்தச் சந்தத் தனமானார்
படையம படையென அந்திக் குங்கட் கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே
மறுகிடு மருளனை யின்புற் றன்புற் றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற் றிருமார்பா
அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் தெறிவேலா
திரிபுர தகனமு வந்திக் குஞ்சற் குருநாதா
ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் பெருமாளே.
Advertisement
</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/276630185&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>