முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 324

இன்றைய பாடல் சுவாமிமலைக்கானது.  இறைவனின் திருவடிகளைத் தொழும் பேற்றைக் கோருகிறது. 

Updated On : 4 ஆகஸ்ட், 2016 at 5:51 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:37 PM

இன்றைய பாடல் சுவாமிமலைக்கானது.  இறைவனின் திருவடிகளைத் தொழும் பேற்றைக் கோருகிறது.  சுவாமிமலையில் யோக நிலையில் அமர்ந்திருக்கும் பெருமாளே என்று முருகனை விளிக்கிறது பாடல்.  சுவாமிமலையில் தந்தைக்கு உபதேசம் செய்யும் கோலம் என்பதால் இது யோகநிலை எனப்படுகிறது.

பாடலின் அமைப்பு என்றால், அடிக்கு (ஒற்றொழித்து) நாற்பது எழுத்துகள்; (ஒற்று உட்பட) 4, 18, 24, 38 ஆகிய எழுத்துகள் மெல்லின மெய்; 15, 30 ஆகிய எழுத்துகள் வல்லின மெய்.  குறிலும் நெடிலும் கலந்து அமைந்துள்ள தாளக்கட்டு.

தானனந் தனதனன தனதனா தத்த தந்த               தனதான
   தானனந் தனதனன தனதனா தத்த தந்த            தனதான

நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து     தடுமாறி
   ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி      மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து        சுகமேவி
   மாமணங் கமழுமிரு கலமபா தத்தை நின்று        பணிவேனோ
வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற            குருநாதா
   வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கிரங்கு  மணவாளா
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து                புடைசூழுங்
   கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த      பெருமாளே.

Advertisement

</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/276784838&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.