முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 326

‘பெரிய பாம்பில் நின்றாடும் கண்ணனின் மருமகனே!  கொடிய சூருன் நடுங்கும்படி கிரெளஞ்ச மலையை இடித்தவனே! 

Updated On : 5 ஆகஸ்ட், 2016 at 5:52 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:38 PM

படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற்
பிடிக்கும்பொழுது வந்தஞ்சலென்பாய் பெரும் பாம்பினின்று
நடிக்கும் பிரான் மருகாகொடுஞ் சூரனடுங்கவெற்பை
இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே
.
 

என்றார் கந்தர் அலங்காரத்தில்.  ‘பெரிய பாம்பில் நின்றாடும் கண்ணனின் மருமகனே!  கொடிய சூருன் நடுங்கும்படி கிரெளஞ்ச மலையை இடித்தவனே!  தோகைமயிலில் ஏறுகின்ற ராவுத்தனே!  எமன் பாசக் கயிற்றால் பிடிக்கும்போது எதிரே தோன்றி ‘அஞ்சல்’ என்பாய்’ என்று பொருள்.  இந்தப் பாடலின் கருத்தைத்தான் இன்றைய திருச்செந்தூர்த் தலத்துத் திருப்புகழ் சொல்கிறது.  கூற்றுவன் வருகின்ற நேரத்திலே எதிரே தோன்றி ‘அஞ்சல்’ என்று ஆண்டுகொள்ளும் வரத்தைக் கேட்கிறது. 

அடிக்கு இருபத்தைந்து எழுத்துகள்; 24, 25 ஆகிய எழுத்துகள் நெடில், மற்ற எல்லாம் குறில்; ஒற்றையும் சேர்த்து 2, 10, 18 ஆகிய எழுத்துகள் மெல்லின மெய்.  வல்லினமெய் எங்கேயும் இடம்பெறவில்லை.  பாடலைப் பார்ப்போம்.

தந்த தனதனன தந்த தனதனன
      தந்த தனதனன                     தனதான

தந்த பசிதனைய றிந்து முலையமுது
         தந்து முதுகுதட                  வியதாயார்
      தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
         தங்கை மருகருயி                ரெனவேசார்
மைந்தர் மனைவியர் கடும்பு கடனுதவு
         மந்த வரிசைமொழி              பகர்கேடா  
      வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
         யங்க வொருமகிட               மிசையேறி
அந்த கனுமெனை யடர்ந்து வருகையினி
         லஞ்ச லெனவலிய               மயில்மேல்நீ
      அந்த மறலியொடு கந்த மனிதனம
         தன்ப னெனமொழிய             வருவாயே
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
         சிந்து பயமயிலு                  மயில்வீரா
      திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
         செந்தி னகரிலுறை               பெருமாளே.

Advertisement

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/276941319&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.