பகுதி - 327
இமவான் மகளான உமையம்மையின் மார்பில் பெருகிய பாலைப் பருகிய மயில் வீரனே! பிறைநிலவும் பாம்பும் கங்கையும் நெருங்கிப் பொருந்தியுள்ள சடாமுடியையுடைய சிவனார் அருளியவனே! திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமானே!
பதச் சேதம் | சொற் பொருள் |
தந்த பசி தனை அறிந்து முலை அமுது தந்து முதுகு தடவிய தாயார் Advertisement
| தந்த பசி: ஏற்பட்ட பசி; |
தம்பி பணிவிடை செய் தொண்டர் பிரியம் உள தங்கை மருகர் உயிர் எனவே சார்

மைந்தர் மனைவியர் கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி பகர் கேடா
| கடும்பு: சுற்றம்; கடனுதவும்: கடமைக்குரிய; பகர்: சொல்லிக் கொண்டு; கேடா: குறையுடன்; |
வந்து தலை நவிர் அவிழ்ந்து தரை புக மயங்க ஒரு மகிடம் மிசை ஏறி
| நவிர்: மயிர்; மகிடம்: எருமை; |
அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில் அஞ்சல் என வலிய மயில் மேல் நீ
| அந்தகன்: எமன்; அடர்ந்து: நெருங்கி; |
அந்த மறலியொடு உகந்த மனிதன் நமது அன்பன் என மொழிய வருவாயே
| மறலி: எமன்; |
சிந்தை மகிழ மலை மங்கை நகில் இணைகள் சிந்து பயம் அயிலும் மயில் வீரா
| மலை மங்கை: உமையம்மை; பயம்: பால்; அயிலும்: பருகும்; |
திங்கள் அரவு நதி துன்று சடிலர் அருள் செந்தி நகரில் உறை பெருமாளே.
| துன்று: நெருங்கிய; சடிலர்: சடாமுடியை உடையவர்; |

தந்த பசிதனையறிந்து முலையமுது தந்து ... பசி உண்டானதை அறிந்து, முலைப்பால் கொடுத்து,

முதுகு தடவிய தாயார் ... முதுகிலே தடவிக்கொடுத்த தாயாரும்;

தம்பி பணிவிடைசெய் தொண்டர் ...தம்பியும்; பணிவிடைகளைச் செய்த வேலைக்காரர்களும்;

பிரியமுள தங்கை மருகர் உயிரெனவே சார் மைந்தர்... பிரியம் நிறைந்த தங்கையும்; மருமக்களும்; உயிரைப்போல் நேசித்த பிள்ளைகளும்;

மனைவியர்கடும்பு... மனைவியரும்; சுற்றத்தாரும் (அனைவரும்),

கடனுதவும் அந்த வரிசைமொழி பகர்கேடா வந்து ... தத்தம் கடமைக்குரிய அந்தந்த உறவுமுறைகளைச் சொன்னபடி, குறையோடு வந்து,

தலைநவிர் அவிழ்ந்து தரைபுக மயங்க ... தலைமயிர் அவிழ்ந்து தரையில் புரளும்படியாக விழுந்து மயங்கும்படியாக;

ஒருமகிட மிசையேறி ... ஓர் எருமைக்கடாவின் மேல் ஏறி

அந்தகனும் எனைய டர்ந்து வருகையினில் ... யமன் என்னை நெருங்கி வருகையிலே,

அஞ்ச லெனவலிய மயில்மேல்நீ ... ‘பயப்படாதே’ என்று சொன்னபடி, வலியதான மயிலின்மீது ஏறிக்கொண்டு நீ,

அந்த மறலியொடு உகந்த மனிதன் ... அந்த யமனிடத்திலே ‘இவன் நமக்கு மிகவும் வேண்டியவன்;

நமதன்பன் எனமொழிய வருவாயே ... ‘நம்முடைய அன்பன்’ என்று சொல்வதற்காக வந்தருள வேண்டும்.

சிந்தை மகிழ மலை மங்கை நகிலிணைகள் ... இமவான் மகளான உமையம்மையின் சிந்தை மகிழும்படியாக அவருடைய இரண்டு மார்புகளிலும்,

சிந்து பயமயிலும் மயில்வீரா ... பெருகிய பாலைப் பருகிய மயில் வீரா! (அல்லது அயிலும் அயில் வீரா என்று பிரித்தால், பருகிய வேலாயுதனே!)

திங்கள் அரவுநதி துன்று சடிலர் அருள் ... பிறைச் சந்திரனும்; பாம்பும்; கங்கையும் நெருங்கி நிறைந்துள்ள சடாமுடியை உடைய சிவபிரான் அருளியவனே!

செந்தி னகரிலுறை பெருமாளே. ... திருச்செந்தூர் நகரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

இமவான் மகளான உமையம்மையின் மார்பில் பெருகிய பாலைப் பருகிய மயில் வீரனே! பிறைநிலவும் பாம்பும் கங்கையும் நெருங்கிப் பொருந்தியுள்ள சடாமுடியையுடைய சிவனார் அருளியவனே! திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமானே!

எனக்குப் பசியேற்பட்டபோது முலைப்பால் தந்து, முதுகைத் தடவிக்கொடுத்த தாயாரும்; தம்பியும்; பணிவிடைகள் செய்த ஏவலாட்களும்; மனைவியும், யாவரும் தத்தமக்குரிய உறவுமுறைகளைக் கூறிக்கொண்டு தலைமுடி அவிழ்ந்து தரையில் புரளும்படி வரிசையாக தத்தம் குறைகளைச் சொல்லிக்கொண்டு அழும்படியாக எருமையில் ஏறிய யமன் என்னை நெருங்கிவரும் போது அவனிடம், ‘இவன் நமக்கு வேண்டியவன்; நமது அன்பன்’ என்று சொல்வதற்காக உன்னுடைய வலிமையான மயில்மீது ஏறிக்கொண்டு வந்தருள வேண்டும்.