முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 328

திருமயிலைத் தலத்துக்கான பாடலிது.  இறைவனை நேரில் தரிசிக்கும் பேற்றைக் கோருகிறது. 

Updated On : 8 ஆகஸ்ட், 2016 at 2:20 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:39 PM

திருமயிலைத் தலத்துக்கான பாடலிது.  இறைவனை நேரில் தரிசிக்கும் பேற்றைக் கோருகிறது. 

சந்த அமைப்பு முறையில் ‘அதல சேட னாராட’ என்ற பாடலை ஒத்தது இது.  குறிலும் நெடிலும் மிகச் சரியான வரிசை முறையில் மாறிமாறி வருகின்ற தாளம்.  அடிக்கு இருபத்தெட்டு எழுத்துகள்.  இதில் 4, 5, 6//12, 14, 15//20, 21, 22//27-28 ஆகிய எழுத்துகள் நெடில்; மற்ற அனைத்தும் குறில்.  27-28ம் எழுத்துகளில் 27ம் எழுத்து நெடிலாகவோ குறிலாகவோ இருக்கலாம்.  ஈற்றுக் குறில், நெடிலாக ஒலிக்கும் என்பதால் இந்த இடத்தில் மாறுதல் ஏற்படலாம்.  (இது: வினைவேர், நெறிபேணா, மடியாதே, வருவாயே, வரைசாடி, மயில்வீரா, வயலோடே, பெருமாளே என்ற அடி ஈற்றுச் சொற்களில் பயிலும் குறில்-நெடில் அமைப்பைப் பார்த்தால் தெரியும்.)

தனன தான தானான தனன தான தானான
            தனன தான தானான                                 தனதான

கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்
                  கலக மேசெய் பாழ்மூடர்                     வினைவேடர்
            கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு
                  கனவி கார மேபேசி                              நெறிபேணாக்
கொடிய னேது மோராது விரக சால மேமூடு
                  குடிலின் மேவி யேநாளு                     மடியாதே
            குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு
                  குவளை வாகும் நேர்காண                 வருவாயே
படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட
                  பணமு மாட வேநீடு                             வரைசாடிப்
            பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானொடு
                  பதிய தாக வேலேவு                             மயில்வீரா
வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னீள்சோலை
                  வனச வாவி பூவோடை                      வயலோடே
            மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான
                  மயிலை மேவி வாழ்தேவர்               பெருமாளே.

</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/277318289&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.