முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 332

‘அடியவர் வேறு, பரம்பொருள் வேறு’ என்றிருக்கும் நிலையை மாற்றி இருவரும் ஒருவராகக் கலந்திருக்கும்

Updated On : 14 ஆகஸ்ட், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM

‘அடியவர் வேறு, பரம்பொருள் வேறு’ என்றிருக்கும் நிலையை மாற்றி இருவரும் ஒருவராகக் கலந்திருக்கும் ஐக்கிய நிலையைக் கோரும் பாடல் இது.  சுவாமிமலைத் திருப்புகழ்.  அடிக்கு ஒற்றொழித்து இருபத்தைந்து எழுத்துகள்; 1, 2, 4//8, 9, 11//15, 16, 18 ஆகியவை நெடில்.  மற்ற அனைத்தும் குறில்.  ஒற்றைச் சேர்த்து 7, 14, 21 ஆகிய எழுத்துகள் வல்லொற்று.  இடையினத்தில் ரகர ஒற்று மட்டும் (ர்) அவ்வப்போது பயில்கிறது.  மெல்லின ஒற்று இல்லாத தாளக்கட்டு. ‘நாலாறு நாலு’ ‘நாலாரும் ஆகமம்’ ‘ஷடாதரம்’ என்று ஏகப்பட்ட கணக்குகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது.  விவரங்களைப் பொருளைப் பார்க்கும்போது காண்போம்.

தானான தான தத்த தானான தான தத்த

      தானான தான தத்த                 தனதான

Advertisement

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து

         நாலாறு நாலு பற்று              வகையான

      நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி

         நாடோறு நானு ரைத்த           நெறியாக 

நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க

         நேராக வாழ்வ தற்கு             னருள்கூர

      நீடார் ஷடாத ரத்தின் மீதேப ராப ரத்தை

         நீகாணெ னாவ னைச்சொ        லருள்வாயே 

சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி

         சீராக வேயு ரைத்த               குருநாதா

      தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு

         தீராகு காகு றத்தி                மணவாளா

காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த

         காவார்சு வாமி வெற்பின்         முருகோனே

      கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி

         காமாரி வாமி பெற்ற             பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.