பகுதி - 334
இது பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த திருப்புகழ். ‘சும்மா இரு சொல்லற’ என்ற வாக்கின்படி
இது பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த திருப்புகழ். ‘சும்மா இரு சொல்லற’ என்ற வாக்கின்படி ‘சும்மா இருக்கும் மௌன ஞான நிலையில் வாழும்படியான பாக்கிய வகையை உனது திருவடிகள் (எனக்கு) அருளாதோ’ என்று சிவயோகத்தைக் கூடும் பேற்றைக் கேட்கிறது.
அடிக்கு இருபத்தைந்து எழுத்துகள்; ஒற்றொழித்து 1, 4//8. 11//15. 18 ஆகிய எழுத்துகள் நெடில். தொங்கல் சீரில் 24, 25 ஆகி இரண்டெழுத்துகளும் நெடிலாக இருக்கலாம் அல்லது 24ம் எழுத்து மட்டுமே நெடிலாக இருக்கலாம். ஒற்றையும் சேர்த்து 2, 9, 16 ஆகிய எழுத்துகள் மெல்லொற்று. இந்தப் பாடலில் வல்லொற்று கிடையாது.
தாந்தன தானதன தாந்தன தானதன
Advertisement
தாந்தன தானதன தனதான
சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக
தாண்டவ மாடியவர் வடிவான
சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர்
தாங்களு ஞானமுற வடியேனுந்
தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு
தோன்றிய சோதியொடு சிவயோகந்
தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு
சோம்பினில் வாழும்வகை அருளாதோ
வாங்குகை யானையென வீன்குலை வாழைவளர்
வான்பொழில் சூழும்வய லயலேறி
மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள்
மாந்திய வாரணிய மலைமீதிற்
பூங்கொடி போலுமிடை யேங்கிட வாரமணி
பூண்பன பாரியன தனபாரப்
பூங்குற மாதினுட னாங்குற வாடியிருள்
பூம்பொழில் மேவிவளர் பெருமாளே.