முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 338

 என்மனம் என்னதான் கட்டறுந்து திரிந்தாலும், எப்படிப்பட்ட நிலையிலும் உன்னுடைய திருவடிகளை ஒருபோதும் மறவேன்

Updated On : 20 ஆகஸ்ட், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM

என்மனம் என்னதான் கட்டறுந்து திரிந்தாலும், எப்படிப்பட்ட நிலையிலும் உன்னுடைய திருவடிகளை ஒருபோதும் மறவேன் என்று பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இந்தத் திருப்புகழில் கூறுகிறார்.

விரைவான தாளகதியை உடைய இப்பாடல், தொங்கல் சீர் ஒன்றைத் தவிர்த்து மற்ற அனைத்துச் சீர்களிலும் முழுக்க முழுக்க குறிலெழுத்துகளாலேயே அமைந்துள்ளது.  அடிக்கு 34 எழுத்துகள்; தொங்கல் சீரில் வரும் 33-34 ஆகிய எழுத்துகள் மட்டுமே நெடில்; மற்ற அனைத்தும் குறில்.  இதில் 34ம் எழுத்து மட்டும் குறிலாகவோ நெடிலாகவோ இருக்கலாம்.  ஈற்றுக் குறில் நீண்டு ஒலிக்கும் என்பதால் இந்த மாற்றம் ஓசைக்கு வெகுவாகப் பொருந்துகிறது. 

தனனதன தனனதன தனனதன தனனதன

Advertisement

      தனனதன தனனதன                தனதான

விடமளவி யரிபரவு விழிகுவிய மொழிபதற

         விதறிவளை கலகலென          அநுராகம்

      விளையம்ருக மதமுகுள முலைபுளக மெழநுதலில்

         வியர்வுவர அணிசிதற            மதுமாலை

அடரளக மவிழஅணி துகிலகல அமுதுபொதி

         யிதழ்பருகி யுருகியரி             வையரோடே

      அமளிமிசை யமளிபட விரகசல தியில்முழுகி

         யவசமுறு கினுமடிகள்           மறவேனே

உடலுமுய லகன்முதுகு நெறுநெறென எழுதிமிர

         வுரகர்பில முடியவொரு          பதமோடி

      உருவமுது ககனமுக டிடியமதி முடிபெயர

         வுயரவகி லபுவனம              திரவீசிக்

கடககர தலமிலக நடனமிடு மிறைவர்மகிழ்

         கருதரிய விதமொடழ            குடனாடுங்

      கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக

         கடகமுட னமர்பொருத           பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.