முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 348

இப்பாடல் காஞ்சீபுரம் தலத்துக்கானது.

Updated On : 30 ஆகஸ்ட், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM

“முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே” என்ற ஈற்றடியில் முடியும் 11 திருப்புகழ்ப் பாக்களில் ஒன்று இது.  இப்பாடல் காஞ்சீபுரம் தலத்துக்கானது. இதற்கு முன்னால் இந்த வரிசையில் ‘உற்பாதப்பூ’ (19ம் தவணை), ‘எற்றா வற்றா’ (148ம் தவணை), ‘செட்டா கத்தே’ (256ம் தவணை) ஆகிய பாடல்களைப் பார்த்திருக்கிறோம்.  இந்த வரிசையில் இன்றைய பாடலை நான்காவதாகப் பார்க்கிறோம்.

அடிக்கு ஒற்றொழித்துப் பதினாறு எழுத்துகளும்; 2, 4, 6, 8, 10, 12 ஆகிய எழுத்துகள் நெடிலாகவும்; ஒற்று சேர்த்து 2, 5, 8, 11, 14, 17 ஆகிய எழுத்துகள் வல்லொற்றாகவும் அமைந்த பாடல். 

தத்தா தத்தா தத்தா தத்தா

Advertisement

      தத்தா தத்தா                        தனதான

கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்

         குப்பா யத்திற்                    செயல்மாறிக்

      கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே

         கொட்டா விக்குப்                 புறவாசித்

தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்

         அஆ உஉ                        எனவேகேள்

      செற்றே சுட்டே விட்டே றிப்போ

         மப்பே துத்துக்                    கமறாதோ

நித்தா வித்தா ரத்தோ கைக்கே

         நிற்பாய் கச்சிக்                   குமரேசா

      நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்

         நெட்டோ தத்திற்                 பொருதோனே

முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ

         முட்டா திட்டத்                  தணிவோனே

      முற்றா நித்தா அத்தா சுத்தா

         முத்தா முத்திப்                  பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.