முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 352

உன் அடிமையாகிய நான் உன்னையன்றி வேறெதையும்

Updated On : 2 செப்டம்பர், 2016 at 2:30 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM

‘உன் அடிமையாகிய நான் உன்னையன்றி வேறெதையும் நம்பேன்’ என்று சொல்லும் பழநி மலைத் திருப்புகழ்.  சற்றே நீளமான சந்த அமைப்பை உடையது; ‘ததத ததததத’ என்பது போன்ற சொற்கட்டுகளும் அமைந்தது.  ஒற்று நீக்கி அடிக்கு 46 எழுத்துகள்; தொங்கல் சீரைத் தவிர்த்து மற்ற எல்லா சீர்களும் குறிலெழுத்து; சீரான இடைவெளிகளில் மெல்லொற்றும் வல்லொற்றும் மாறிமாறி வரும் அமைப்பு. 

தனன தனனதன தந்தத்த தந்ததன

      தனன தனனதன தந்தத்த தந்ததன

Advertisement

      தனன தனனதன தந்தத்த தந்ததன         தந்ததான

அதல விதலமுத லந்தத்த லங்களென

         அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென

         அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென  அங்கிபாநு

      அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென

         அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென

         அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு      சம்ப்ரதாயம்

உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி

         ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி

         லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை            வந்துநீமுன்

      உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென

         மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்

         உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை    நம்புவேனோ

ததத ததததத தந்தத்த தந்ததத

         திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி

         தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு             திந்திதோதி

      சகக சககெணக தந்தத்த குங்கெணக

         டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி

         தகக தகதகக தந்தத்த தந்தகக                என்றுதாளம்

பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக

         அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு

         பரிய குடர்பழுவெ லும்பைப் பிடுங்கரண       துங்ககாளி

      பவுரி யிடநரியு லம்பப்ப ருந்திறகு

         கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்

         பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள்   தம்பிரானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.