பகுதி - 626
இறைவனுடைய அருள்மொழியை
இறைவனுடைய அருள்மொழியைக் கோரும் இப்பாடல் திருவேற்காடுக்கானது. இதில் சொல்லப்படும் ஆலயமும் தற்போது திருவேற்காடு என்றதும் நினைவுக்கு வரும் ஆலயமும் வேறு என்பதை முன்னமேயே சொல்லியிருந்தோம்.
அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் இரண்டு நெடில், இரண்டு குறில், இரண்டு வல்லொற்று என்ற அமைப்பையும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களும் மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களும் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாய் மூன்று மூன்று எழுத்துகளைக் கொண்டவை.
தாத்தாத்தன தானன தானன
தாத்தாத்தன தானன தானன
தாத்தாத்தன தானன தானன தனதான
Advertisement
கார்ச்சார்குழ லார்விழி யாரயி
லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு
வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் மயலாலே
காழ்க்காதல தாமன மேமிக
வார்க்காமுக னாயுறு சாதக
மாப்பாதக னாமடி யேனைநி னருளாலே
பார்ப்பாயலை யோவடி யாரொடு
சேர்ப்பாயலை யோவுன தாரருள்
கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு குமரேசா
பார்ப்பாவல ரோதுசொ லால்முது
நீர்ப்பாரினில் மீறிய கீரரை
யார்ப்பாயுன தாமரு ளாலர்சொ லருள்வாயே
வார்ப்பேரரு ளேபொழி காரண
நேர்ப்பாவச காரண மாமத
ஏற்பாடிக ளேயழி வேயுற அறைகோப
வாக்காசிவ மாமத மேமிக
வூக்காதிப யோகம தேயுறு
மாத்தாசிவ பாலகு காவடி யர்கள்வாழ்வே
வேற்காடவல் வேடர்கள் மாமக
ளார்க்கார்வநன் மாமகி ணாதிரு
வேற்காடுறை வேதபு ரீசுரர் தருசேயே
வேட்டார்மக வான்மக ளானவ
ளேட்டார்திரு மாமண வாபொனி
னாட்டார்பெரு வாழ்வென வேவரு பெருமாளே.